|
நளன் கதை படித்தவர்களை அணுகமாட்டேன், என சனிபகவான் உறுதியளித்துள்ளார். எனவே, அவரது முற்பிறவி கதையைப் படிப்பதுடன், நளன் சரித்திரத்தில் வரும் அன்னப்பறவை யார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர், ஒருசமயம் காட்டிற்கு வந்த சிவனடியார் ஒருவரை தம் இல்லத்தில் தங்க வைத்தனர். ஆகுகன், வீட்டிற்கு வெளியில் காவல் காத்தான். அப்போது, அங்கு வந்த மிருகம் ஒன்று அவனைக் கொன்று விட்டது. தன் கணவன் இறந்த துக்கத்தில் ஆகுகியும் இறந்தாள். இதைக்கண்ட சிவனடியார் மிகவும் மனம் வருந்தி, சிவனிடம் தன் பாவத்திற்கு மன்னிப்பு வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன் அடுத்த பிறவியில் வேடதம்பதியர் இணைவதற்கு நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்று அருள் செய்தார். அதன்படியே, அடுத்த பிறவியில் வேட தம்பதியர் நளன், தமயந்தியாகவும், சிவனடியார் அன்னப்பறவையாகவும் பிறந்தனர். அவர்கள் இணைவதற்காக அன்னமே தூது சென்றது. |
|
|
|