|
சீதையின் தந்தை ஜனகரின் குரு யாக்ஞவல்கியர். இவர், வியாசரின் மாணவரான வைசம்பாயனரை குருவாக ஏற்றுக் கொண்டார். வைசம்பாயனரை பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றியிருந்தது. இதை அவரது மாணவர்களே ஏற்றுக் கொள்ள முன்வந்தனர். யாக்ஞவல்கியர் மற்ற மூவரையும் அவமதிக்கும் வகையில், உங்களுக்கு குருவின் பாவத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடையாது. என்னால் மட்டுமே முடியும் என கர்வமாகப் பேசினார். வைசம்பாயனருக்கு கோபம் வந்து விட்டது. நீ என்னிடம் வேதம் படித்த கர்வத்தால் தானே இப்படி பேசினாய். என்னிடம் படித்ததைக் கக்கு, என்று உத்தரவு போட்டார். யாக்ஞவல்கியரும் கக்கி விட்டார். அதை வேத தெய்வம், தித்திரி என்ற பறவை வடிவத்தில் வந்து உண்டது. அப்படி சாப்பிட்டது தான் தைத்திரியம் என்ற உபநிஷதமாக உருப்பெற்றது. வேதத்தின் சாரத்தையே உபநிஷதம் என்பார்கள். |
|
|
|