Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுளை காண்பது எப்படி?
 
பக்தி கதைகள்
கடவுளை காண்பது எப்படி?

அன்று பவுர்ணமி. குருகுலத்தில் தன் சீடர்களுக்குச் சில நெறிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் குரு. அன்று குருகுலத்திற்கு அநேகம் பேர் வந்து குருவை நமஸ்கரித்து, ஆசி பெற்றுச் சென்றனர். வந்தவர்கள் குருவிற்குப் பழங்களை காணிக்கையாகத் தந்ததால் நிறைய பழங்கள் சேர்ந்துவிட்டன. குரு தமது சீடர்களில் ஒருவனைக் கூப்பிட்டுப் பழங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும்படிக் கூறினார். சீடனுக்கோ பழத்தை யாரிடம் முதலில் தர வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டானது. குருவிடம் கேட்டான். உனக்கு யார் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ, யார் மிகவும் உண்மையானவர் என்று எண்ணுகிறாயோ அவருக்கு முதல் பழத்தைக் கொடு என்றார். எல்லோரும், அச்சீடன் தன் குருவுக்குத்தான் முதலில் கொடுப்பான் என்று எண்ணினர். ஆனால் அச்சீடன் முதலில் கையில் எடுத்த பழத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டான்! யாரும் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்ன காரியம் செய்துவிட்டாய்? குருவிற்கு முன்பாக அவரை அவமதித்தது போல் நடந்து கொள்ளலாமா? தவறு செய்துவிட்டாயே என்று சக சீடர்கள் கூறினார்கள். ஆனால் குரு என்ன சொன்னார்? ஒருவன் முதலில் தன்னை நம்ப வேண்டும். உண்மையும், நம்பிக்கையும் ஒருவனை நேர்வழிப்படுத்தும் கிரியா ஊக்கிகள். அவை இவனிடம் நிறைந்திருக்கின்றன என மகிழ்ச்சியுடன் கூறி அந்தச் சீடனை குருகுலத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார் குரு.

எப்போது பகவானைக் காணலாம்?

பகவானை எப்போது காண முடியும்? என்று தீவிரமாக ஒவ்வொருவரையும் அணுகிக் கேட்டுக் கொண்டிருந்தான் ஒரு சீடன். அப்போது அருகில் இருக்கும் மகான் அதற்கான சரியான பதிலைக் கூற முடியும் என்று சிலர் கூறினர். அவனும் அந்த ஆசிரமத்திற்குச் சென்றான். ஆசிரமத்தின் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லை. வந்தவன் மெதுவான குரலில், குருவே என்றான். என்ன வேண்டும்? என்று கேட்டார் மகான். பகவானை அடையும் வழியைப் பற்றிய விவரத்தைக் கேட்க வந்திருக்கிறேன் என்றான். அப்படியா? முதலில் அந்தக் கைவிளக்கை ஏற்று என்றார். அவனும் விளக்கை ஏற்ற முயன்றான். ஆனால் முடியவில்லை. விளக்கில் நீர் இருப்பதால் ஏற்ற முடியவில்லை என்றான். நீரை வெளியே கொட்டு. இந்தா, இந்த எண்ணையை ஊற்று குருவே, எண்ணெயினால் நிரப்பினாலும் திரி ஈரமாக இருப்பதால் ஏற்ற முடியவில்லை என்றான். அப்படியாக ! திரியை நன்கு பிழிந்து வெயிலில் காய வை. பிறகு ஏற்றிப் பார் என்றார். குருவே, இப்போது விளக்கை ஏற்றிவிட்டேன். என் சந்தேகத்திற்கு இனிமேலாவது விடையைக் கூறுவீர்களா? என்று கேட்டான். அதைத்தான் இப்போது விளக்கினேனே. புரியவில்லையா? என்று கேட்ட குரு விளக்கினார். நம்மில் இருக்கும் ஜீவாத்மாதான் அந்தத் திரிநூல். அது ஆசை என்னும் நீரில் நனைந்து கிடக்கிறது. ஆசையாகிய நீரை அறவே வெளியேற்றி விட்டு, வைராக்கியம் எனும் சூரிய ஒளியில் அதைக் காய வை. பின்பு பகவான் நாமம் என்னும் எண்ணெயைக் கொண்டு அகலை நிரப்ப வேண்டும். பிறகே விவேகம் என்னும் தீப ஒளியை ஏற்ற முடியும். இதைச் சரியாகச் செய்தாலே உனக்கு எல்லாம் விளங்கிவிடும் என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar