Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உயர்ந்த செல்வம்
 
பக்தி கதைகள்
உயர்ந்த செல்வம்

கபிலன் மிகச்சிறந்த பக்தன். அவன் அருணகிரிநாதரின் திருப்புகழைப் படித்து உள்ளம் உருகுவான். திருவாசகத்தைப் படித்து, இறைவா! எனக்கு இனி பிறவியே வேண்டாம். உன் காலடியில் இருக்கும் பரமானந்த நிலையை அருள்செய், என்று மாணிக்கவாசகரை போல் உள்ளம் உருகுவான். அவனது மனைவி மல்லிகாவோ நேர் எதிர். அவன் கொண்டு வந்து கொடுக்கும் பணத்துக்குள் குடும்பம் நடத்தத் தெரியாதவள். யார் வீட்டில் என்ன வாங்கினாலும், அது தன் வீட்டிலும் இருக்க வேண்டுமென விரும்புபவள். உலகமே தன் கைக்குள் வந்தாலும், அதிலும் குறை காணும் இயல்புடையவள். வாழ்வில் எதிர் துருவங்களான இவர்கள் வீட்டில் எப்படி நிம்மதி இருக்கும்? இவருக்கு கொஞ்சமாவது என் மீதும், இரண்டு பிள்ளைகள் மீதும் அக்கறையிருக்கிறதா? இப்போது சம்பாதிப்பதை விட இன்னும் கூடுதலாகப் பணம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? ஐயோ! அவள் பட்டு கட்டுகிறாளே! என்னிடம் நூல் புடவை கூட சரியில்லையே! அவர்கள் வீட்டில் விதவிதமாய் சாப்பிடுகிறார்களே ! இங்கே தினமும் இட்லியும், தோசையும் தானா! இறைவா! இவரைத் திருத்து என்று அவளும் அதே இறைவனிடம் தான் முறையிட்டாள்.

ஒருசமயம், அவ்வூருக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் மண்ணைத் தங்கமாக்கும் வித்தை தெரிந்தவராம். ஊரெல்லாம் இதே பேச்சு.மல்லிகாவின் காதுகளில் இந்த சேதி விழுந்ததோ என்னவோ! கபிலனை அரிக்க ஆரம்பித்து விட்டாள். உடனே சாமியார் கிட்டே போங்க! மண்ணைத் தாங்கமாக்கும் மந்திரக்கோலை வாங்கிட்டு வாங்க, என்று விரட்டினாள். மல்லி! சாமியாரிடம் ஞானம், பக்தி, தியானம், யோகம், முக்தி போன்றவற்றை கேட்கலாம். அவரிடம் செல்வத்தைக் கேட்பது முறையா!  என்றான். அட பைத்தியக்கார மனுஷா! சொன்னதைச் செய்யும். இல்லாவிட்டால், பிள்ளைகளுடன் நான் என் பிறந்த வீட்டுக்குப் போய் விடுவேன். பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்ற தெரியாத துப்பு கெட்டவன் என்று உம்மை ஊர் சிரிக்க செய்துவிடுவேன், என்று விரட்டினாள். வேறு வழியில்லாமல், அவன் சாமியாரிடம் போனான். அவரிடம், தனக்கு மந்திரக்கோல் வேண்டும் என்று கேட்கவே வெட்கப்பட்டான். தலைகுனிந்து அமர்ந்திருந்த அவனிடம், தம்பி! தயங்காமல் உன் சந்தேகத்தை என்னிடம் கேள், என்றார் சாமியார். சாமி! எனக்கு பணத்தின் மீது பற்று இல்லை. இருப்பதைக் கொண்டு வாழ நினைப்பவன். என் மனைவிக்கோ பணத்தின் மீது மட்டுமே பற்று. உங்களிடம் எதைத்தொட்டாலும் தங்கமாகும் மந்திரக்கோல் இருப்பதாகவும், அதை பெற்று வாருங்கள் என்றும் சொல்லி அனுப்பினாள். எனக்கு அதைக் கேட்க இஷ்டமில்லை. இருப்பினும், நிர்ப்பந்தத்தால் கேட்கிறேன். அதைத் தர முடியுமா? என்றான்.

சாமியார் உச் கொட்டினார். அடப்பாவமே! நேற்றே நீ வந்திருக்கக்கூடாதா! பரதேசியான எனக்கு அது தேவையில்லை என்று கருதி, வடக்குத்தெரு பண்ணையார் வீட்டு முன்புள்ள சாக்கடையில் தூக்கி வீசிவிட்டேன். வேண்டுமானால் தேடி எடுத்துக் கொள், என்றார். இவன் மனைவியிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அன்றிரவு அவள் சத்தமில்லாமல், கணவனுடன் அந்த இடத்துக்குச் சென்றாள். விளக்கு வெளிச்சத்தில் கணவனும், மனைவியும் கையை விட்டு துழாவினர். ஒரு வித்தியாசமான குச்சி கபிலன் கையில் கிடைத்தது. அதைக் கொண்டு பக்கத்திலுள்ள கல்லை தொட்டான். தங்கமாகி விட்டது. மல்லிகாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கோலுடன் வீட்டுக்கு வந்தனர். அதன்பின் மல்லிகா தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. அவள் கணவனைக் கண்டுகொள்ளவே இல்லை. பிள்ளைகளும் தாறுமாறாக செலவழித்தார்கள். கபிலனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. அவன் பந்தபாசத்தை துறந்து காசிக்கு கிளம்பினான். அனுபவிக்க தெரியாத மனுஷா! போ போ! என்று அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் எரிந்து விழுந்தாள் மல்லிகா. அழியும் செல்வத்தை விட்டு அழியாச்செல்வமான முக்தியைப் பெறும் நோக்கில் காவியணிந்து ரயிலேறினான் கபிலன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar