|
அசோகவனத்தில் தேவி முகம் வாடி, கண்ணீரும் கம்பலையுமாக உட்கார்ந்திருந் ததைக் கண்ட அனுமன் வருத்த மடைந்தான். சீதா தேவிக்கு வந்திருப்பது ராமதூதன் என்பது தெரியாது. தன்னை இதற்கு முன் அவள் பார்த்தது கூட இல்லை. தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று அனுமனுக்குப் புரியவில்லை. முதலில் சீதையிடம் சென்று ராமன் சிவதனுசை வென்று மணம் புரிந்து கொண்ட நிகழ்ச்சியைச் சொன்னான். இந்த விவரம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை என்று, ஒப்புக் கொள்ளவில்லை. மிதிலையில் கண்ணோடு கண் நோக்கினான் என்ற விருத்தாந்தத்தையும் சொன்னான். ஆனால், ராவணனின் மாயங்களை அறிந்திருந்தால் அவள் அதையும் நம்பத் தயாராகவில்லை. கடைசியாக ராமன் அடையாளமாக அளித்திருந்த சூடாமணியைக் காட்டி தான் ராம தூதன் என்பதை மெய்ப்பித்தான். அனுமன் எவ்வளவோ விவரங்களைக் கூறியும் தான் நம்பாமல் மாருதியைச் சந்தேகித்ததை எண்ணிக் கண்ணீர் சொரியலானாள். மாருதி சந்தர்ப்பங்களை எடுத்துரைத்து, அதனால் வருந்த வேண்டாம் என்று தேவியை ஆசுவாசப்படுத்தினான். ராமகாரியத்துக்காகவும், தனக்காகவும் ஏழு கடலையும் தாண்டி இலங்கையில் தன்னைத் தேடி அலைந்து வந்து, நடந்த பல சம்பவங்களைச் சொல்லி, தனக்கு தைரியமூட்டிய ராமதூதனிடம் தேவிக்குப் பச்சாதாபமும் பரிவும் ஏற்பட்டது. உடனே மாருதியை அழைத்து, உலகம் உள்ளவரை மரணமில்லாப் பெருவாழ்வை அளித்து சிரஞ்சீவியாக்கினாள். |
|
|
|