Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுள் தந்த ரகசியம்!
 
பக்தி கதைகள்
கடவுள் தந்த ரகசியம்!

ஒரு ஊரில் மண்பாண்டம் செய்யும் ஒருவரும், வைரத்துக்குப் பட்டை தீட்டும் ஒருவரும் நண்பர்களாக இருந்தார்கள். ஓய்வு நேரத்தில் இருவரும் சந்திப்பார்கள். உலக விஷயம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் உற்சாகம் இல்லாமலே பேசிக் கொள்வார்கள். தத்தம் தொழிலில் ஏற்படும் சலிப்பைக் பற்றியே அவர்களது பேச்சு இருக்கும். கடவுள் ஏந்தான் எனக்குக் களிமண்ணில் பானை, பாண்டம் செய்யும் வேலையைக் கொடுத்தானோ தெரியவில்லை. நாளெல்லாம் மேலே மண், சேறு  என்று உடம்பே அழுக்காகிறது. பின்னர் பானைகளைச் சுட்டு, வெயிலில் அலைந்து - ச்சே நாய்ப் பிழைப்புப்பா என்ற குயவன், ஆனால் உன்பாடு தேவலை. விலை உயர்ந்த வைரங்களைப் பட்டை தீட்டும் மதிப்பான பணி என்று சொன்னான். அதற்கு வைரத்தை பட்டை தீட்டுபவன் சொன்னான். நீ வேறுப்பா என் பொழைப்பின் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். பட்டை தீட்டுகிறேன் என்ற பெயரில் என் கைகளை எத்தனை முறை அறுத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா ? கூர்ந்து வைரத்தைப் பார்த்துப் பார்த்து என் கண் பார்வையே மங்கிப் போய்விட்டது. என்று அவனும் தன் பங்குக்குப் புலம்பத் துவங்கினான்.

அப்போது உலகத்தில் மகிழ்ச்சியான வேலை எதுதான் என்று அறிந்து கொள்ள இருவரும் ஆசைப்பட்டார்கள். அந்த ஊரில் இருந்த ஒரு ஞானியிடம் சென்று தங்கள் குறைகளைக் கொட்டினார்கள். உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்யும் வேலையைத் தவிர வேறு ஏதாவது வேலை தெரியுமா ? என்றார் ஞானி. இருவரும் தெரியாது என்றனர். மண் பாண்டங்களும், பட்டை தீட்டப்பட்ட வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன ஆகும் ? என்றார் ஞானி. இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள். எங்கள் வேலை போய்விடும். பிச்சை எடுக்க வேண்டியதுதான். ஞானி புன்னகைத்தார். தம்பிகளா, இந்த உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை கிடைக்கிறது. அந்தக் குறைகளைச் சரி செய்யும் சிறப்புத் திறமை உங்களிடம் இருப்பதால்தான் மக்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதை நினைத்துப் பெருமையல்லவா பட வேண்டும்? அதை விட்டுவிட்டு வருத்தப்படுவது என்ன நியாயம்? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். குறைகளை எல்லாம் சரி செய்யும் வாய்ப்பாகத் தன் வேலையை நினைப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை, அதில் உள்ள சிரமங்களை மட்டும் பார்ப்பவன் உங்களை மாதிரி இருக்கிறான். கடவுள் தந்த வாழ்க்கை ரசியம் இதுதான் என்றார்.  அவர்கள் இருவருக்கும் புரிந்தது. ஞானியை வணங்கிவிட்டு. சந்தோஷமாக ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டுக் கொண்டு, தங்கள் வேலையைப் பார்க்க உற்சாகமாகக் கிளபினார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar