Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » குருவை சந்தேகிக்க கூடாது!
 
பக்தி கதைகள்
குருவை சந்தேகிக்க கூடாது!

குரு ஒருவர், தன்னுடைய சீடர்களுடன் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தார். புண்ணிய நதிகளில் நீராடிக் கொண்டு அங்குள்ள ÷க்ஷத்திரங்களைத் தரிசனம் செய்துகொண்டு, தங்களுடைய பாதயாத்திரையைத் தொடர்ந்தார்கள். புண்ணிய நதிகளில் நீராடினால் மனது தூய்மையாகும். மேலும் அத்தகைய நதிகள் உள்ள ÷க்ஷத்திரங்களுக்கும், மஹா ÷க்ஷத்திரங்களுக்கும் நடந்தே செல்வது மிகவும் விசேஷமாகும். மனிதர்கள் மனது, வாக்கு, சரீரம் இவற்றினால் தான் பாவம் செய்கின்றார்கள். செய்த தவற்றை நினைத்து இறைவனிடம் வருந்தி அழுவதால், மனதினால் செய்த பாவம் போகும். இறைவனுடைய நாமங்களைப் பாடி துதி செய்வதால், வாக்கினால் செய்த பாவம் போகும். சரீரத்தினால் செய்த பாவத்தை, உடலை வருத்தி தவம் செய்வதால் போக்கிக் கொள்ளலாம். அதனால் தான் திருப்பதி, பழநி, சோளிங்கர் போன்ற தலங்களில் இறைவன் மலை மீது கோயில் கொண்டுள்ளான். மலை ஏறி, உடலை வருத்தி, அவனைச் சென்று தரிசனம் செய்தால், நாம் உடலால் செய்த பாவங்கள் போகும். மலை மீது இல்லாத தலங்களுக்கு பாதயாத்திரையாக செல்வது நல்லது. இவற்றையெல்லாம் நன்கு அறிந்திருந்தார் அந்த குரு. அதனால் தான் பாரத தேசத்தில் உள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் ÷க்ஷத்திரங்களுக்கும் நடந்தே சென்று கொண்டிருந்தார்.

ஒரு நாள் இரவு நேரத்தில் அவர்கள் ஒரு காட்டைக் கடக்க நேரிட்டது. அப்போது, இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. சீடன் ஒருவன் குருவிடம், சிலர் இடி விழுந்து இறக்கின்றார்களே, அதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு குருநாதர், பெரிய பாவம் செய்திருந்தால் இடி தலையில் விழும் என்றார். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது இடி விழுவதற்கு தயாராக இருந்தது. குரு தன்னுடைய தவ வலிமையால் அதை அப்படியே அந்தரத்தில் நிற்க வைத்துவிட்டார். குரு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, நீங்கள் ஒவ்வொருவராக அந்த மரத்தின் அடியில் போய் நில்லுங்கள். உங்களில் யார் தலையில் இடி விழுகின்றதோ, அவர்கள் மகத்தான பாவம் செய்தவர் ஆவீர்கள் என்றார். இடியைப் பற்றி பேச்சை ஆரம்பித்த சீடனுக்கோ, தெரியாத்தனமாக நான் இந்த பேச்சை ஆரம்பித்து விட்டேனே, இப்படி விபரீதமாக முடிந்து விட்டதே என்று அழ ஆரம்பித்தான். மற்ற சீடர்களும், உன்னால் தான் இப்படி ஆகிவிட்டது என்று கூறி அவனை ஒரு வழி செய்துவிட்டார்கள். எல்லோருக்கும் உள்ளுக்குள்ளே ஒரே நடுக்கம். குருவோ, இடி அந்தரத்தில் நின்று கொண்டிருக்கிறது, சீக்கிரம் என்கின்றார். முதலில் ஒருவன் போய் நின்றான். அவன் தலையில் இடி விழவில்லை. போகும் போது அழுதுகொண்டும் பயந்து கொண்டும் சென்ற அவன், வெளியில் வந்தான்.

ஏன் என்றால் அவன் இப்போது பாவம் செய்யவில்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா! மற்ற எல்லோரையும் அலட்சியமாகப் பார்த்தான். இப்படி ஒவ்வொருவராக நடுங்கிக் கொண்டே சென்றார்கள். யார் தலையிலும் அந்த இடி விழவில்லை. தன்னுடைய சீடர்கள் யாரிடமும் எந்த பெரிய பாவமும் இல்லை என்று அறிந்து குரு மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால், அந்த சீடர்கள் அனைவரின் மனஓட்டமும் ஒரே மாதிரியாக இருந்தது. என்ன அது? நம்மையெல்லாம் மட்டும் போய் நிற்கச் சொன்னாரே தவிர, அவர் போய் நின்றாரா? அவரிடம் ஏதோ ஒரு பெரிய பாவம் இருக்க வேண்டும் என்பதே அது. தங்களுக்குள் ரகசியமாக பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள். குருநாதர் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார். நீங்கள் அனைவரும் நான் அந்த மரத்தடியில்  சென்று நிற்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அப்படித்தானே? என்றார். ஆமாம் குருதேவா! பரீட்சை என்று வந்துவிட்டால் யாரும் விதிவிலக்கு கிடையாது அல்லவா? என்றார்கள். அதில் ஒருவன் குருவையும் பரீட்சை செய்ய வேண்டும் என்று நான் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன் என்றான். குரு மிகவும் பயப்படுவது போலவும், தயங்குவது போலவும் பாசாங்கு செய்தபடி அந்த மரத்தின் அடியில் சென்று நின்றார். இவ்வளவு நேரம் பொறுமையாக அந்தரத்தில் நின்று கொண்டிருந்த இடி, இப்போது இறங்கியது. எங்கே? மொத்த சீடர்களின் தலைமேல். இப்போது தானே அவர்களிடம் எந்தப் பாவமும் இல்லை என்று நிரூபணம் ஆகியிருந்தது? அதன்பின் இப்போது ஒரு பெரிய பாவம் அவர்கள் எல்லோரிடமும் வந்து விட்டது. குருவிடம் பாவம் இருக்கும் என்று சந்தேகப்படுவதை விட, பெரிய பாவம் என்ன இருக்கின்றது? அதனால் தான் இடி இறங்கியது. குருவாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் முன்பாக ஆயிரம் தடவை யோசிக்கலாம். தேர்ந்தெடுத்த பிறகு ஒரு தடவை கூட யோசிக்கக்கூடாது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar