|
நாம் ஒரு உத்தம குருவை அடைந்து, அவரிடமிருந்து மந்திர ஜபத்தை உபதேசமாகப் பெற்று அதை சிரத்தையுடன் ஜபம் செய்து வருவோமானால், நமது குரு ஸ்தூல சரீரத்தை விட்டு மறைந்துவிட்ட நிலையிலும், நமது மனமே குருவின் நிலைக்கு உயர்ந்து நம்மை வழிநடத்திச் செல்லும். ஒருவர், அப்படித்தான் உத்தம குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற்று தினமும் அதை சிரத்தையுடன் ஜபம் செய்து வந்தார். அவர் குரு மறைந்துவிட்டார். ஒரு நாள் அந்த ஜபம் செய்பவர் பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறிய சிறிது நேரத்துக்கெல்லாம் அவருடைய உள் உணர்வு அவரை, கீழே இறங்கு, கீழே இறங்கு என்று உணர்த்திக்கொண்டே இருந்தது. அவர் அதை நம்முடைய மனதின் கற்பனை என்று அலட்சியம் செய்து பார்த்தார். ஆனால், முடியவில்லை. ஏதோ சாக்குபோக்கு சொல்லி, அந்தப் பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிவிட்டார். அவர் எந்தப் பேருந்தில் இருந்து இறங்கினாரோ அந்தப் பேருந்து ஒரு விபத்தில் சிக்கியது என்றும், அதில் பயணித்த பலர் இறந்தனர் என்றும் மாலை நேரத்தில் தலைப்புச் செய்தியாக வெளியாகியது. உங்கள் குரு தற்போது உடலுடன் இல்லாவிட்டாலும்கூட, தன் பக்தர்களின் உள்ளுணர்வில் இருந்து எப்போதும் வழிநடத்துவார். |
|
|
|