|
தவ வலிமை மிக்க துறவி ஒருவர், வறண்டு கிடந்த ஓர் ஊருக்கு வந்தார். அவர் வந்ததும் மழை பொழிந்து வளம் கொழித்தது. அந்நாட்டு மன்னன் துறவியின் பெருமை அறிந்து அவரை அவைக்கு அழைத்துப் பாராட்டினான். அவையில் பலரும் புகழ்ந்தனர். அனைத்தையும் கேட்ட துறவி தேம்பி அழ ஆரம்பித்தார். திகைத்த மன்னன் , காரணம் கேட்டான். நடந்தவை யாவும் இறைவன் செயல். அவனைப்புகழ்வதை விட்டு விட்டு என்னைப் புகழ்ந்து என் சுமையைக் கூட்டுகிறீர்களே அதை நினைத்துதான் அழுகிறேன்...! என்றார் துறவி. |
|
|
|