|
துறவி ஒருவர் தனது சீடர்களிடம் என்னதான் முயன்றாலும் மனிதனால் அடைய முடியாதது எது ? எனக் கேட்டார். கடவுளைக் காண்பது; காற்றைப் பிடிப்பது; இப்படி பலர் பலவித பதில்களைக் கூறினார்கள். அபத்தமான அவற்றைக் கேட்டு நகைத்தார் ஞானி. கடைசியில் அவரே பதில் கூறினார். என்னதான் முயன்றாலும் மனிதனால் அடைய முடியாதது, அவனது கடந்த காலம் தான். இன்று நிகழ்காலம். இதுவே நாளை கடந்த காலமாகிவிடும். எனவே நிகழ்காலத்திலேயே இறைவன் மேல் ஈடுபாடு கொண்டிருங்கள் ! என்றார் ஞானி. |
|
|
|