|
குரு ஒருவர் ஆற்றின் நடுவில் உள்ள கற்பாறை மீது அமர்ந்து வேதம் படித்துக் கொண்டிருந்தார். செல்வச் செருக்கு கொண்ட தனவந்தர் ஒருவர், குருவை வணங்கி தான் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த இரு பொன் வளையல்களை அவர் முன் வைத்து ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். குரு ஒரு வளையலை கையில் எடுத்து விரல்களின் இடையே உருட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று அது அவரின் கையிலிருந்து நழுவி ஆற்றினுள் விழுந்தது. ஐயோ என அலறியபடியே செல்வந்தன் ஆற்றினுள் குதித்து வளையலைத் தேடினான். கிடைக்கவில்லை. களைத்துப் போய், மேலே வந்தவன் வளையல் விழுந்த இடத்தை தயவு செய்து சொல்லுங்கள். நான் தேடி எடுத்து விடுவேன் ! என்றான். குரு புன்முறுவல் பூத்து அடுத்த வளையலையும் ஆற்றில் எறிந்து, அதோ அங்கே ! என்றார். |
|
|
|