இறைவன் உலகை படைக்கும்போது இதனை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்? என்று கேட்டது ஒரு தேவதை. எதற்காக நீங்கள் இதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றது இரண்டாவது தேவதை. நானும் எதாவது உதவி செய்யட்டுமா? என்றது மூன்றாவது தேவதை. இவற்றின் மதிப்பு என்ன? என்றது நான்காவது தேவதை. ஐந்தாவதாக வந்த ஒரு தேவதை இறைவனின் படைப்பைக் கண்டு மகிழ்ந்தது. இறைவன் இந்த தேவதைகளை பூமிக்கு அனுப்பி வாழ்ந்து பார்க்க அனுப்பினார். முதல் தேவதை விஞ்ஞானி. இரண்டாவது தேவதை தத்துவமேதை. மூன்றாவது தன்னலமற்ற தியாகி. நான்காவது தேவதை வியாபாரி. ஐந்தாவதாக வந்த தேவதை ஞானியாக படைக்கப்பட்டார். கேள்வி கேட்காமல் இறைவன் படைப்பை ஏற்றுக்கொண்டதால் ஐந்தாவது தேவதையை ஞானியாகப் படைத்தார் இறைவன். |