Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பொய் சொல்லக்கூடாது பாப்பா!
 
பக்தி கதைகள்
பொய் சொல்லக்கூடாது பாப்பா!

ஒரு திருடன், கோடீஸ்வரனாகி செட்டிலாக நினைத்தான்.  அவனது அம்மாவுக்கு உடல்நிலை  சரியில்லாமல் போனது. நீ இன்னும் பெரிய திருடனாக மாறி நிறைய சம்பாதிப்பாய், என ஆசிர்வதித்தாள்.  திருடனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அதே நேரம் மகனிடம்,எனக்காக ஒன்று செய்வாயா? என்றாள். என்ன! என்ற அவனிடம், பொய் சொல்லமாட்டேன் என உறுதி கொடு, என்றாள். இவனும் சத்தியம் செய்து கொடுத்து விட்டான். அம்மா இறந்து போனாள். அடுத்த சில நாட்களிலேயே அரண்மனை கஜானாவில் திருடச் சென்றான். வழியில் குதிரையில் வந்த ஒருவனைப் பார்த்தான். எங்கே போகிறாய்? என்றான். பொய் சொல்வதில்லை என்றசத்தியம் செய்திருந்ததால்,திருடப்போகும் விஷயத்தை மறைக்காமல் சொன்னான்.

வந்தவன் அவனிடம், அப்படியானால், நானும் வருகிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி, என்றான். திருடன் ஒப்புக்கொண்டான். கஜானாவிற்கு சென்ற அவர்களில், குதிரையில் வந்தவன் வெளியே நின்று யாரும் வருகிறார்களா என்று கண்காணிக்க, திருடன் உள்ளே புகுந்து ஒரு பெட்டியை உடைத்தான். மூன்று வைரக்கற்களை எடுத்தான். வைரக்கல்லை உடைத்து ஒன்றரை வீதம் பங்கு வைத்தால் சரியாக இருக்காது என்பதால், இரண்டை எடுத்து வந்தான். ஆளுக்கொன்றாக பிரித்துக் கொண்டு போய்விட்டனர். மறுநாள் விஷயம் வெளியாக மந்திரி கஜானாவிற்கு சென்றார். ஒரு கல் மட்டும் இருந்தது. ஆசையில், அதை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்ட அவர், மூன்றுமே திருட்டு போய் விட்டதாக மன்னனிடம் சொல்லிவிட்டார். திருடன் கைது செய்யப்பட்டான்.

பொய் சொல்வதில்லை என சத்தியம் செய்திருந்ததால் நடந்த உண்மையை விசாரணையின் போது சொல்லிவிட்டான். மன்னனும் அவனிடம்,நீ சொல்வது உண்மையே. அன்று குதிரை மீது திருடன் போல் வேடமிட்டு வந்தது நான் தான். நீ இரண்டு கல்லை எடுத்து ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டாய். இன்னொன்றை இந்த மந்திரி எடுத்து ஒளித்து வைத்ததும் எனக்கு தெரியும், என்றவன் மந்திரியை சிறையில் தள்ளினான். திருடனின் உண்மைத் தன்மையைப் பாராட்டி மந்திரியாக்கி விட்டான். இதனால் தான், நம்ம பாரதி பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று இளைய தலைமுறைக்காக எழுதி வைத்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar