ஒரு துறவி, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்ய காசிக்குப் புறப்பட்டார். சீடனிடம், நான் இன்னும் இரண்டு தீபாவளிகளுக்கு அங்கே தான் இருப்பேன். மூன்று வருஷம் கழித்தே வருவேன். அதுவரை என் சொத்தை பத்திரமாக பார்த்துக் கொள், என்றார். அப்படி என்ன சொத்து! ஒரே ஒரு கோவணம் மட்டும் தான்! ஒருநாள், காலை எழுந்து பார்த்தபோது, கோவணம் சின்னா பின்னமாகி கிடந்தது. எலி செய்த கைங்கர்யம் என புரிந்து கொண்ட சீடன், ஒரு பூனையை வாங்கினான். பூனைக்கு பால் வாங்க ஒரு பசுவை வாங்கினான். பசுவுக்கு புல் போட ஒரு வயலை வாங்கினான். அங்கே, களை பிடுங்க வந்த ஒரு இளசு மீது காதல் கொண்டான். அது திருமணத்தில் முடிந்தது.
குழந்தைகளைப் பெற்றான். துறவி திரும்பி வந்தார். ஏண்டா! போகும் போது சீடனாக இருந்தாய். இப்போது சம்சாரியாகி விட்டாயே! எப்படி? என்றார். எல்லாம் உங்கள் கோவணத்தால் வந்த வினை தான் என்றான். ஒரு புதுக்கோவணம் வாங்கியிருந்தால் பிரச்னை அப்போதே தீர்ந்திருக்கும். ஆசைகளை இவனாகவே பெருக்கிக் கொண்டு கோவணத்தின் மீது பழியைப் போட்டால் எப்படி? அதனால் உழைப்பைப் பெருக்குங்கள். சிரமங்களை எதிர்கொள்ளும் போது, இறைவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டு, பணிகளைத் தொடருங்கள். உங்க ஆசை நிறைவேறும்.