Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இலவசம் கூடவே கூடாது!
 
பக்தி கதைகள்
இலவசம் கூடவே கூடாது!

என்ன தான் கஷ்டம் வந்தாலும் சரி, இலவசமாக யாராவது எதையாவது தந்தால் வாங்கக் கூடாது. அது பிச்சை எடுப்பதற்கு சமம். ஒருமுறை நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. சாப்பிட ஏதுமில்லாமல் பலர் இறந்தனர். அப்போது, ஏழு முனிவர்கள் உணவு தேடி எங்கெங்கோ அலைந்தனர். சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஒருநாள், இறந்து கிடந்த ஒரு மனித உடலைப் பார்த்தனர். பசியின் தாக்கத்தால், ஆன்மிகம், ஜபம், தவம் எல்லாவற்றையும் மறந்து, அந்த உடலையே பிய்த்து தின்ன ஆரம்பித்து விட்டனர். அப்போது, அந் நாட்டு அரசன் அவ்வழியே வந்தான்.

அவர்களது செயல் கண்டு திகைத்துப் போன அவன், முனிவர்களே! ஆன்மிகச் செம்மல்களான நீங்களே இப்படி செய்தால், மற்றவர்கள் கதியென்ன! உங்களுக்கு நான் வேண்டுமளவு அரிசி, பருப்பு, காய்கறி வகைகளைத்தருகிறேன். என் அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கிறேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள், என்றான். முனிவர்கள் மறுத்துவிட்டனர்.மன்னா! பிணத்தைத் தின்பது என்பது கொடுமையிலும் கொடுமை தான்! ஆனால், பசியின் முன் பத்தும் பறந்து போய் விடுகிறது. அதற்காக, நீ எங்களுக்கு இலவசமாக உணவு தருவதாகச் சொன்னாயே! அவ்வாறு உன்னிடம் பிச்சை வாங்கினால் அது அதை விடக் கொடுமை. பிணம் தின்பதை விட கொடுமையானது இலவசத்தை  பெறுவது, என்றார். இலவசங்களை ஒதுக்குவோம். பிச்சை எடுப்பதை ஒழிப்போம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar