Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » அலைகள் ஓய்வதில்லை!
 
பக்தி கதைகள்
அலைகள் ஓய்வதில்லை!

கிடைக்கிற நல்ல சந்தர்ப்பங்களை  பயன்படுத்தாதவன், காலம் முழுவதும் வாழ்க்கையில் கரை சேர மாட்டான். கந்தன் என்ற சீடன் குருவிடம் பயிற்சி எடுத்தான். பயிற்சி முடிந்ததும், அவனுக்கு தீட்சை அளிக்க அவர் விரும்பினார். தயங்கிய சீடன்,சுவாமி! தீட்சை பெற்றவன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. எனக்கோ இளவயது. இல்லறக் கடமையை நிறைவேற்றி விட்டு, வயதான காலத்தில் இதைப் பார்த்துக் கொள்ளலாமே, என சொல்லிவிட்டு ஊருக்கு போய் விட்டான். திருமணம் செய்தான். மகன் பிறந்தான். அவனும் பெரியவனாகி திருமணம் செய்தான்.

அதன்பிறகு, அப்பாவை கவனிக்க மறுத்துவிட்டான். மனமுடைந்த கந்தன் மறுபடியும் குருவிடம் வந்தான். சுவாமி! இல்லறம் இனி வேண்டாம். தீட்சை கொடுங்கள், என்றான். குருநாதர் அவனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். கடலையே பார்த்துக் கொண்டிருந்தார். சீடன் அவரிடம், எனக்கு தீட்சை தருவதாகச் சொல்லி விட்டு, அலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! என்றான் பொறுமையிழந்து! குருநாதர் அவனைப் பார்த்து சிரித்தார். அலைகள் ஓயட்டும். ஓய்ந்த பின் கடலில் குளித்து விட்டு தீட்சை கொடுக்கலாம் என நினைக்கிறேன், என்றார். சீடன் புரிந்து கொண்டு தலை குனிந்தான். சந்தர்ப்பம் தேடி வரும் போது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டவனின் கதி இது தான்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar