Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பணம் மட்டும் போதாது!
 
பக்தி கதைகள்
பணம் மட்டும் போதாது!

புண்ணியம் பெற பணத்தை பிறருக்கு வாரி இறைத்தால் மட்டும் போதுமா! அவ்வாறு கிடைக்கும் புண்ணியம் பிறப்பற்ற நிலையை தந்து விடுமா! இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத, கந்தசாமி என்ற பணக்காரர் தானதர்மத்தை தவறாமல் செய்து வந்தார். ஒருமுறை, துறவி ஒருவர்அவரது ஊருக்கு விஜயம் செய்தார். அவரை வரவேற்ற கந்தசாமி, அவரைச் சந்தித்து, சுவாமி! நான் கடந்த 20 ஆண்டுகளாக செய்த தானத்தின் மதிப்பு 10 லட்சம். கடந்த வாரம் மட்டும் ஐந்து ஏழை மாணவர்கள் படிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பீஸ் கட்டியிருக்கிறேன். இந்த புண்ணியத்தால் எனக்கு மோட்சம் கிடைத்து விடுமா? என்றார். துறவி மனதுக்குள் சிரித்துக் கொண்டார். பதிலேதும் சொல்லவில்லை. மறுநாளும் கந்தசாமி வந்தார். அன்றைய தினம் பத்து ஏழைகளுக்கு 500 ரூபாய்செலவில் சாப்பாடு வாங்கித் தந்ததாகச் சொன்னார். அதற்கும் துறவி பதிலளிக்கவில்லை. ஆனாலும், கந்தசாமி விடுவதாக இல்லை.

தினமும், தன் அறப்பணியை துறவி யிடம் தெரிவித்து வந்தார். ஒருநாள், கந்தசாமி துறவியைச் சந்தித்து, அன்றைய தர்மக்கணக்கை சொன்னார். துறவி அவரை அழைத்துக் கொண்டு பல விஷயங்களைப் பேசிக்கொண்டே நடந்தார். வெயில் கடுமையாக இருந்தது. காலில் செருப்பு இல்லாததால், காலை ஊன்ற முடியாமல் தத்தளித்தார்.  அதைக் கவனித்த துறவி, என்னாச்சு என்றார். கால் சுடுகிறது என்ற கந்தசாமியை, அதற்கென்ன! உங்கள் நிழல் தான் முன்னால் விழுகிறதே! அதில் கால் வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றார். கந்தசாமி அவ்வாறே செய்ய முயல, நிழல் முன்னால் நகர்ந்தது. துறவி சிரித்தார். கந்தசாமி! உங்கள் நிழலே உங்களுக்கு உதவ மறுக்கும் போது, உங்களிடமுள்ள பணம் மட்டும் மோட்சத்தைக் காட்டி விடுமா என்ன! தானம் செய்வது அவசியம். ஆனால், பாவபுண்ணிய கணக்குப் பார்த்தோ, பலன் கருதியோ தானம் செய்தால் மறுபிறப்பைத் தவிர்க்க முடியாது. எல்லா பலனும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்து விடுபவரே மோட்சம் பெறுவார், என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar