ஒரு கணவனும் மனைவியும் கயாவுக்குச் சென்று தர்ப்பணம் விடும்போது, அங்கிருந்த பண்டா (பூஜாரி), ஐயா, நீங்க எதை விட்டு விடுகிறீர்கள், என்று கேட்டார். கணவனுக்கு ஒன்றையும் விட மனசில்லே. பண்டா கேட்டார். கத்தரிக்காயை விட்டுடறீங்களா! இவர், எனக்கு அது ரொம்பப் பிடிக்குமேஅப்பா, கேரட்டுஅது கண்ணுக்கு நல்லது. வைட்டமின் ஏ இருக்குசரி.... தக்காளியை விட்டுடறீங்களா! தக்காளி ரொம்ப குறைவாச்சே. அப்ப, உருளைக்கிழங்கு பூரிக்கு மசால் செய்யஉருளைக்கிழங்கு உதவுமே சலிச்சிப்போன பண்டா, இப்ப எதைத்தான் விடப் போறீங்க என்று கேட்கிறார்.
கணவன் தீர யோசித்து காசு பணம் செலவில்லாதது அது ஒண்ணுதான்னு நினைச்சி, நான் மானத்தை உட்டுடறேன்னார். பண்டாவுக்கு மானம்னா என்னான்னு தெரியாது. அவன் சொன்னமாதிரியே சொல்லித் தர்ப்பணம் விடுகின்றார். பின்னர், மனைவியைப் பார்த்து, நீ எதையம்மா விடப்போகிறாய் என்று பண்டா கேட்க, குருக்களே, நான் இந்தக் கணவனை விட்டுடறேன் என்கிறாள். பண்டா, ஏம்மான்னு கேட்கிறார் மானத்தை விட்ட புருஷனோடு எப்படி வாழ்வேன்.