Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » விளக்கும் செருப்பும்!
 
பக்தி கதைகள்
விளக்கும் செருப்பும்!

சிந்தாதிரிப்பேட்டையிலே சிங்காரம்னு ஒருத்தர். தினமும் சிவபூஜை பண்ணுவார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கன்னு சொல்லிக்கிட்டு பன்னீர் இலையிலே முள்ளு மூக்களவு கிள்ளிக் கிள்ளி போடுவார். ஒரே ஒரு இலை. ஓம் சிவாயநம, ஓம் சிவலிங்காய நம, ஓம் ஆத்மாய நம, ஓம் ஆத்மலிங்காய நம.. இலை தீர்ந்து போனா சும்மா கையை ஆட்டுவார். சுவாமி சிரிப்பார். என்னையே ஏமாத்துறாயான்னு. சூடத்தைக் காட்டி அந்தச் சூடம் எரியதற்குள்ள அணைச்சிடுவார். சூடம் அணைஞ்சவுடனே, விளக்கையும் அணைச்சிட்டு அந்தப் பூஜைக்கு வைத்த திராட்சையை அவரே தின்னுட்டு வெளியே வருவார். வடிகட்டின கஞ்சன்.

அவருக்கு மயிலாப்பூரில் ஒருத்தர் விருந்துக்கு சொல்லிட்டார். அண்ணா நீங்க சிவபூஜா துரந்தரர். நீங்க சாப்பிட்டா ஆயிரம்பேர் சாப்பிட்ட மாதிரி அதுக்கென்ன காலை யிலேயே, ஒண்ணும் சாப்பிடாமே வந்துடறேன். 12 மணிக்குச் சாப்பாடு. 11.30 மணிக்கே வந்துடறேன். சம்சாரத்துக்கிட்டே சொல்றாரு. இஞ்சி கசாயம் மட்டும் கொடு. அதைக் குடிச்சிட்டு, பூஜையை முடிச்சிட்டு, திராட்சையை சாப்பிட்டு விட்டு, குடையைப் பிடிச்சிக்கிணு, செருப்பு போட்டுக்கிணு மூணு மைல் (5 கி.மீ.,) நடந்தே போனார். மூணுபேரு ஆகாரத்தை மொத்தமா சாப்பிடலாம்னு பிளான் பண்ணிக்கிணு போறார். மைலாப்பூருக்கு முன்னாடி லஸ்சுன்னு ஒரு இடம் வருதே. அங்கே போனவுடனே, ஐயோ... மறந்துட்டேன்னு,.

திரும்ப ஒரே ஓட்டம். குடல் தெரிக்க ஓடினார். சிந்தாதிரிப் பேட்டைக்கே. அடியே... என்னாங்க..... மறந்துட்டேன் என்னத்த மறந்துட்டேள் பூஜையிலே விளக்க நிறுத்த (அணைக்க) மறந்துட்டேன். அநியாயமா எண்ணெய் உரிஞ்சி போயிருக்கும். இது கூட எனக்குத் தெரியாதா? நீங்க கிளம்பின உடனே வெளக்கை நிறுத்திட்டேன். அது சரி, நீங்க மூணு மைல் திரும்பி நடந்து வந்துருக்கேளே... செருப்பு தேஞ்சிருக்குமே. ஏண்டி, நானென்ன மடையனா? செருப்பை அங்கேயே எடுத்து காயிதத்திலே சுத்தி, கக்கத்திலே வச்சிக்கினேன். இதை அங்கே போய் தான் கால்லே போடுவேன். இந்த மாதிரி கஞ்சன்கள் வாழ்ந்தா நாடு எப்படி இருக்கும்?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar