Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » புன்னகைத்த தாத்தா!
 
பக்தி கதைகள்
புன்னகைத்த தாத்தா!

ஒருநாள், விடுமுறை நாள் காலையிலேயே மணி எழுந்து விட்டான். டீ குடித்த அவனிடம் அவன் அப்பா, டேய்! மணி! இன்று லீவாச்சே! வீட்டில் உள்ள பயன் இல்லாத பொருளை எல்லாம் கழித்து விடு. இன்றைக்கு வீட்டை ஒழுங்கு படுத்துவது உன் வேலை என்றார்.  அப்பா சொல்லைத் தட்டாத மணியும், அக்கறையாக வேலையைத் தொடங்கினான்.  வெளியில் சென்ற தந்தை மதியம் வீட்டுக்கு வந்தார். கழித்துப்போட்ட ஒரு புத்தகத்தைக் கண்டு அதிர்ந்தே போய்விட்டார். அது திருக்குறள் புத்தகம். மணி! என்ன வேலை செய்தே? திருக்குறளைப் போய் பழைய குப்பையோடு சேர்த்துட்டாயே! இது உன் தாத்தா எனக்கு வாங்கிக் கொடுத்தது, என்று சொல்லி கையில் எடுத்தார்.

நீங்க சொன்னதைத் தான் நான் செய்தேன். ஒருமுறை கூட, நீங்களோ நானோ இதைப் படிச்சதே இல்லை. புத்தகம் என்றால் படிப்பதற்குத் தான். வெறுமனே வீட்டில் இருந்தால், அது குப்பையில் அடக்கம் தானே! என்று பதிலளித்தான். மகனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த அவர், அன்றுமுதல் ஒரு குறளைப் பொருளோடு படிப்பது என்று முடிவெடுத்தார். தந்தையைப் பார்த்து மகனும் படிக்க ஆரம்பித்தான்.  ஒருநாள் மணி, தன் வகுப்பில் படித்த,  கற்க கசடற கற்பவை கற்றபின்  நிற்க அதற்குத் தக என்ற குறளைப் பொருளோடு படித்து விட்டு நிமிர்ந்தான். ஹாலில் இருந்த புகைப் படத்தில் இருந்த தாத்தா, அவனைப் பார்த்து மகிழ்ச்சியில் புன்னகைத்தார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar