Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆசையில்லாத மனம்!
 
பக்தி கதைகள்
ஆசையில்லாத மனம்!

ரிதத்துவஜர் என்ற அரசரின் மனைவி மதாலஸா. இவள் பக்திப்பூர்வமானவள். ஏதோ விரதம், பூஜை, புனஸ்காரம் என்றிருக்கும் சாதாரண பக்தியல்ல! மிக உயர் பக்தி. ஆத்மாவே பிரம்மமானது, அதாவது மனிதனே தன் செய்கைகளால் தெய்வமாகலாம், தெய்வத்தை அடையலாம் என நினைப்பவள். ரிதத்துவஜர் இவளது பக்தியை எண்ணி வியப்படைந்தார். இவர்களது திருமணம் முடிந்ததும், மதாலஸா கணவரிடம்,அன்பரே! நமக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைக்க வேண்டும். தாங்களோ, பிறரோ அவ்விஷயத்தில் தலையிடக்கூடாது, என்றாள். காரணம் தெரியாத அரசரும் வாக்கு கொடுத்து விட்டார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்ததும் அரசர் விக்ராந்தன் (ஊர் ஊராக சுற்றுபவன்) என்று பெயரிட்டார். இதைக் கேட்டு அரசி சிரித்தாள். அதற்கான காரணம் அரசருக்குப் புரியவில்லை. ஆனால், கேட்கும் தைரியம் இல்லை. அந்தக் குழந்தையை அரசி நிராஞ்ஜன் என்று அழைத்தாள். இதற்கு பற்றில்லாதவன் என்று பொருள்.

குழந்தைக்கு பாலூட்டும் பருவத்திலேயே வாழ்க்கை என்றால் இன்னதென்று கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள். இந்த வாழ்வு, அரசாங்கம், தாய், தந்தை, உற்றார் நண்பர்கள் எல்லாம் பொய்யானது. பிரம்மம் (தெய்வம்) ஒன்றே மெய்யானது, என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். குழந்தை பெரியவனான பிறகும், இதே போதனை தொடரவே, அவன் அரசுப் பொறுப்பேற்காமல் காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். இதையடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் இதே நிலையையே அடைந்தனர். அரசருக்கு கவலை வந்து விட்டது. ராணி இப்படியே செய்தால், தனக்குப் பிறகு நாடாள யார் இருக்கிறார்கள்? இந்த தேசம் பாதுகாப்பற்று, வாரிசற்று போய் விடுமோ என அஞ்சினார். இதையடுத்து ஒரு குழந்தை பிறந்தது. இம்முறை ராஜா பெயர் வைக்க வந்த போது, ராணி அவரைத் தடுத்தாள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வைக்கும் பெயர் சரியாக அமையவில்லை. நான் இவனுக்கு அலர்க்கன் என்று பெயர் சூட்டுகிறேன், என்றாள். ராஜா அதிர்ந்து விட்டார். ஏனெனில், அந்தப் பெயருக்கு பைத்தியக்கார நாய் என்று அர்த்தம்.

இவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதா என்று எண்ணினார். ராணியிடம், நீ இப்படி செய்யலாமா? என்றார். நீங்கள் முதல் குழந்தைக்கு விக்ராந்தன் என்றும், அடுத்தவனுக்கு சுபாகு (வலிமைமிக்க தோள்களை உடையவன்) என்றும், மூன்றா மவனுக்கு சத்துருமர்த்தனன் (எதிரிகளை துவம்சம் செய்பவன்) என்றும் பெயர் வைத்தீர்கள். அந்தப் பெயருக்கேற்றாற் போல் அவர்கள் நடந்தார்களா? இல்லை. காட்டுக்கு தவமிருக்க போய் விட்டார்கள். அப்படியிருக்க, இவனுக்கு பைத்தியம் என்று பெயர் வைத்ததால், அவன் பைத்தியமாகப் போகிறானா என்ன! இந்தப் பெயரே இருக்கட்டும், என அடித்துச் சொல்லி விட்டாள். ஒன்றும் புரியாத ராஜா, இவனையாவது அரசாள தயார் படுத்து. இவனையும் விட்டால் நாடாள யார் உள்ளனர்? என்றார். இதை ராணி ஏற்றுக் கொண்டாள். மகனுக்கும் அரசாளும் வித்தையை கற்றுக் கொடுத்தாள். அவன் பொறுப்பேற்றதும், ராஜாவும், ராணியும் காட்டுக்கு புறப்பட்டனர். மகனே! உனக்கு கஷ்டம் வந்தால் மட்டும் இந்த ஓலையைப் பிரித்துப் பார், என ஒரு மோதிரத்துக்குள் வைத்து கொடுத்தாள். மகனும் அதை அணிந்து கொண்டான். பல காலம் கழிந்ததும், அவனுக்கு வாழ்வில் ஏதோ வெறுப்பு தட்ட, ஓலையை எடுத்துப் படித்தான். நீ பற்றற்றவனாக இரு, அப்போது ஆத்மஞானம் அடைவாய், என்றிருந்தது. அதிலுள்ள உண்மையை அலர்க்கன் புரிந்து கொண்டான். அவனும் தவமிருக்க காட்டுக்குப் போய் விட்டான். குழந்தைகள் அதிக ஆசையின்றி, ஒழுக்கமாக வளர இந்தக் கதையை மார்க்கேண்டய புராணத்தில் சொல்லியுள்ளனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar