காந்திஜி ஒரு சமயம் வீட்டுக்குள் நுழையும் போது, அவரது மனைவி கஸ்தூரிபா சமையலில் ஈடுபட்டிருந்தார். கஸ்தூரி! நீ என் மனைவி இல்லை,. உள்ளே நுழைந்ததும், நுழையாததுமாக அவர் இவ்வாறு கூறியதைக் கேட்ட கஸ்தூரி, என்ன சொல்கிறீர்கள்? என்றார் அதிர்ச்சியுடன். இதை நான் சொல்லவில்லை. ஆங்கில அதிகாரி ஜெனரல் ஸ்மட்ஸ் சொல்கிறார்! என்னைப்பற்றி சொல்ல அவருக்கென்ன அதிகாரம்? நமது திருமணம் பதிவு செய்யப்படவில்லையாம், அதனால் அப்படி சொல்கிறார்,. இதற்கு வழி என்ன? இதுபோன்ற சட்டங்களை எதிர்த்து பெண்களும் போராடுவது தான்,.
போராடினால் ஜெயிலில் அடைப்பார்களே! அடைக்கட்டும்! சீதை, சாவித்திரி, நளாயினி எல்லாரும் கணவன் பின்னால் தானே சென்றார்கள். எங்களைப் பின்பற்றி நீங்களும் வரலாமே! அவர்கள் தெய்வப் பிறவிகள்,. ஏன்...முயற்சித்தால் நாமும் அவர்களைப் போன்ற தெய்வநிலையை அடையலாம். எனக்கு அங்கே தரும் உணவு பிடிக்காதே! பழங்கள் தந்தால் சாப்பிடு. அதுவும் தராவிட்டால்... உண்ணாவிரதம் இரு. ஜெயிலுக்குப் போய் செத்துப்போ என சொல்லாமல் சொல்கிறீர்கள்! அப்படி நீ செத்தால், உன்னையே லோகநாயகியாக நினைத்து வழிபடுவேன்,. கஸ்தூரிபா போராட்டத்தில் பங்கேற்க தயாரானார்.