Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பரமாச்சாரியார் பட்டினி கிடந்தது ஏன்?
 
பக்தி கதைகள்
பரமாச்சாரியார் பட்டினி கிடந்தது ஏன்?

வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. வரதட்சணை தருவதும் வாங்குவதும் தவறு. அதனை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை என்று வலியுறுத்தி வந்தார் காஞ்சி மகாபெரியவர். தன் பெயரைத் திருமணப் பத்திரிகைகளில் போடுவோர் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார். ஆனாலும் சிலர் மீறினர். அந்த சமயத்தில் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் சுவாமிகளிடம் பேட்டிக்கு வந்தார். உங்களை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள், திருமண பத்திரிகையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் அனுகிரகத்துடன் என்று போடுகிறார்கள். அவ்வாறு போடுபவர்களில் பலர் உங்கள் கட்டளையை மீறி வரதட்சணை வாங்குகிறார்களே? என்று அவர் கேட்டார்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு மகான் சொன்னார் என்னுடைய தபஸ் போதவில்லை போலிருக்கிறது என்று. ஆங்கிலேயருக்கு அது புரியவில்லை. அதை உணர்ந்த சுவாமிகளே தொடர்ந்து, தவம் அதிகம் செய்தவர்களின் வார்த்தைகளை எல்லோரும் கேட்பார்கள். அதனை யாராலும் மீற முடியாது. அந்த அளவுக்கு நான் இன்னும் தவம் செய்யவில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் என் பேச்சை அவர்கள் மீறமுடிகிறது என விளக்கினார். மற்றவர்களுடைய தவறுகளைக் கூட தன்னுடையதாகவே பாவித்த அவரது குணத்தை வியந்து, மகானை வணங்கி விடைபெற்றார், அந்தப் பத்திரிகையாளர். அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார். ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை. மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது. அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள். எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்...! எனப் பணிந்து வேண்டினர். மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது. பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன். ஒரு சன்னியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது என்றார். ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar