Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இந்தப்பணம் புழுவுக்கு சமம்
 
பக்தி கதைகள்
இந்தப்பணம் புழுவுக்கு சமம்

ஜானஸ்ருதி என்பவர் பெரும் பணக்காரர். தர்மவான். அவரைப் பார்த்தால் ஏழைகள் கையெடுத்து வணங்குவார்கள். எத்தனை தடவை கேட்டாலும் கொடுப்பார். அள்ளிக் கொடுக்கும் மனசுள்ள அவரது வீட்டில் லட்சுமி தாயார் நிரந்தரமாக தங்கிவிட்டாள். நேற்று பத்தாயிரம் ரூபாய் தானம் கொடுத்தால், இன்று இருபதாயிரம் எங்கிருந்தோ வந்துசேர்ந்தது. பிறகென்ன! வள்ளலுக்கெல்லாம் வள்ளலாகி விட்டார். அவருக்கு பறவைகளின் பாஷை தெரியும். ஒருநாள் இரண்டு மகான்கள், அன்னப்பறவைகள் போல தங்களை உருமாற்றிக் கொண்டு பறந்தனர். ஒரு பட்சி மற்றொன்றிடம், கீழே தெரிகிறானே ஜானஸ்ருதி, அவனுக்கு மறுபிறவி உறுதி என்றது,.

என்ன உளறுகிறாய்? அவர் செய்கிற தர்மத்துக்கு மோட்சம் நிச்சயம்,.  ஹூம்...தானத்துக்கு குபேரபதவி கிடைக்கும். அதை அனுபவித்ததும் திரும்பவும் இங்கே வர வேண்டும். உனக்கு ரைக்குவரைத் தெரியுமா? அவரைப் போல் மாறினால் வேண்டுமானால், இவர் மோட்சம் போகலாம்,. ஜானஸ்ருதி அசந்து விட்டார். ரைக்குவரைத் தேடிச் சென்றார். ஒரு ஆள் சாலையோரம் புழு அரித்து படுத்திருந்தார். அவர் தான் ரைக்குவர் என்றனர் மக்கள். இவர் எப்படி மோட்சம் போவார்? இருப்பினும் பறவைகள் பேசியது பொய்யாகாதே! சந்தேகத்துடன் ஜானஸ்ருதி ரைக்குவரை நெருங்கினார். தான் கொண்டுவந்த ரத்தினம், வைரம், தங்கம் அடங்கிய தட்டை அவரிடம் நீட்டி ஏற்றுக்கொள்ள வேண்டினார். அடேய்! இது என் உடலில் ஊறும் புழுவுக்கு சமம். இறைவன் எனக்கு தந்துள்ள இந்த வியாதியை மனதார ஏற்றுக் கொண்டுள்ளேன்,. ஜானஸ்ருதி அசந்து விட்டார். இறைவன் தருவதை முழு மனதுடன் ஏற்பவனே மோட்ச கதிக்கு தகுதியானவன் என்ற உண்மையை உணர்ந்தார். தன் செல்வத்தை துறந்து ரைக்குவரின் சீடராகி விட்டார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar