மகானிடம் சீடன் ஒருவன், சுவாமி! மனிதனுடைய விருப்பத்தை எல்லாம் கடவுளால் நிறைவேற்ற முடியாது போல் தெரிகிறதே என்றான். ஏன் அப்படி சொல்கிறாய் . காட்டில் மரம் வெட்டும் விறகுவெட்டி, எப்போதும் குளிரடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறான், என்றான் சீடன். நியாயம் தானேப்பா! குளிரடித்தால் தானே வெட்டிய விறகெல்லாம் சீக்கிரம் விற்கும்,. எப்படி நியாயமாகும் சுவாமி! பழவியாபாரியோ எப்போதும் வெயில் கொளுத்த வேண்டும் என்றல்லவா நினைக்கிறான் என்றான். அதுவும் நியாயமே! பழங்கள் கெடாமல் இருக்கவேண்டுமானால் வெயில் அடிக்கத் தானே வேண்டும், என்றார். சுவாமி! நான் சொல்வதைக் கேளுங்கள். விவசாயியோ மழையை வேண்டுகிறான்.
செங்கல் சூளைக்காரனோ சாரல் கூட விழக்கூடாது. எப்போதும் வெயில் வேண்டும் என்று நினைக்கிறான். கடவுளே நினைத்தாலும் கூட எப்படி இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?, என்றான். மகான் அவனிடம், இப்போது வானிலை எப்படி இருக்கிறது?, என்று கேட்டார். வெயில் காய்கிறது சுவாமி,. போனவாரம் எப்படி இருந்தது?,. சுவாமி! செவ்வாய், புதன் கிழமைகளில் மழை பெய்ததால் குளிராக இருந்தது,.பார்த்தாயா கடவுளின் லீலையை! போனவாரத்தில் மழை, குளிர். இந்த வாரத்தில் வெயில். எல்லோரின் விருப்பத்தையும் அவர் நிறைவேற்றி வைத்ததை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய் அல்லவா, என்றார்.