உத்தரபிரதேசத்தில் கயா என்ற ÷க்ஷத்திரம் இருக்கிறது. இங்கே தர்ப்பணம் செய்வதற்காக செல்பவர்கள், தங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றை விட்டு வருவது வழக்கம். ஒரு தம்பதியர் அந்த ஊருக்குப் போனார்கள். தர்ப்பணம் செய்யும் போது, பண்டா (குருக்கள்) அவர்களிடம், நீங்க எதை விடப் போறீங்க? என்று கேட்டார். கணவனுக்கு எதையும் விட மனமில்லை, யோசித்துக் கொண்டே இருந்தார். கத்தரிக்காயை விடறீங்களா? எனக்கு அது ரொம்ப பிடிக்குமே,.கேரட்டு...அது கண்ணுக்கு நல்லதாச்சே! வைட்டமின் ஏ இருக்கு. சரி...போகட்டும், தக்காளியை விட்டுடுங்க. அதை அதிகமா சாப்பிட்டா கால் உளைச்சல் வரும்னு சொல்றாங்க,. அது விலை குறைவாச்சே,. அப்ப...உருளைக்கிழங்கு,.பூரி மசால்னா எனக்கு உயிரு. உருளைக்கிழங்கு இல்லாம எப்படி மசால் செய்யுறது,.
பண்டாவுக்கு சலிப்பு வந்துவிட்டது. சரி...நீங்களே ஒண்ணைச் சொல்லுங்க,.கணவன் ரொம்ப யோசித்தார்.ஐயா! காசு பணம் செலவழிக்காம, உடம்பைக் கெடுத்துக்காம ஒண்ணே ஒண்ணை விடுதேன்! என்ன அது.. பண்டா அவசரப்பட்டார். மானம்,.பண்டா தலையில் அடித்துக் காண்டே, அம்மா! நீங்க எதை உடுறீங்க! என மனைவியிடம் கேட்டார். குருக்களே! இந்த புருஷனை விட்டுடுறேன்,.ஏம்மா!மானத்தை விட்ட புருஷனோட எப்படி வாழுறது!திருவள்ளுவர் சொன்னார். மான் கூட மயிர் நீக்கினால் உயிர் வாழ்வதில்லை, என்று. அப்படியானால் மனிதன் எப்படி இருக்க வேண்டும்? - வாரியாரின் சொற்பொழிவில் இருந்து...