Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கலைமகள் தந்த சாபம்!
 
பக்தி கதைகள்
கலைமகள் தந்த சாபம்!

அடர்ந்த காடு. இளந்தென்றல். துள்ளிக் குதிக்கும் மான்கள். புதர் மறைவில் முயல்கள். கீச் கீச் பறவைகளின் இசை நாதம். பஞ்சு மெத்தை புற்கள். மலைக்குன்றில் வெண்பனி மேகங்கள். மலை முகட்டில் குதித்து எழும் வெள்ளை அருவி. பூலோக அழகில் மெய்மறந்திருந்தாள் கலைவாணி சரஸ்வதி. தேவி ! நாம் வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. இன்னும் நீராடவில்லை. யாக சாலையில் நமக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று ரிஷிபத்தினி ஒருத்தி நினைவூட்டினாள். அப்போதுதான் கலைவாணிக்கு ஞாபகம் வந்தது. தேவி ! நீ சீக்கிரம் நீராடிவிட்டு வந்துவிடு. நாம் இருவரும் இணைந்திருந்து தான் இந்த யாகத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் அதற்குரிய பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று வழியனுப்பி வைத்த பிரம்மதேவனின் நினைவு வந்தது. அச்சச்சோ...! நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். இவ்வளவு நாழிகை இந்த பூலோக அழகை ரசித்து என்னை மறந்துவிட்டேன். நேரமாகிறது. சீக்கிரம் வாருங்கள் என்று அழகிய தடாகத்தை நோக்கி நடந்தாள். தடாகத்தில் தாமரைகள் சில மொட்டாகவும் சில விரிந்து சிரிப்பது போலவும் தோற்றம் அளித்தன. அவற்றை ரசித்தவாறே சரஸ்வதி மீன்போல் துள்ளிக் குதித்து நீராடினாள். கூடவே ரிஷிபத்தினிகளும் மெய்மறந்து நீராடிக் கொண்டிருந்தனர். கலைமகள் அலைபோல் நீந்தி நீராடிக் கொண்டிருக்க யாகம் நடத்த வேண்டிய இடத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. யாகத்திற்குத் தேவையான பொருட்களையும் செல்வத்தையும் குபேரனும் அக்னி தேவனும் சேகரித்துக் கொண்டு வந்தனர். விஸ்வகர்மா தனது கலைத்திறனைக் காட்டி அழகிய யாகசாலை அமைத்திருந்தான். இந்திரன், பிரம்மதேவன் நடத்தும் யாகத்திற்கு புலஸ்தியரை அழைத்து வந்திருந்தான். பிரம்மன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிவனும் விஷ்ணுவும்கூட அங்கே எழுந்தருளி இருந்தனர். இந்திரன் தேவர்களோடு ஏழுலக முனிவர்களையும் அழைத்து வந்திருந்தான்.

எல்லோரும் தயாராக இருந்தனர். புலஸ்தியர் பிரம்மனை அழைத்து, பிரம்மா, முகூர்த்தம் நெருங்குகிறது. யாகத்தை சீக்கிரம் ஆரம்பிக்கவேண்டும். எங்கே உன் தர்மபத்தினி? என்று கேட்டார். பிரம்மாவுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது சரஸ்வதி நீராடிவிட்டு வருவதாக சென்று இருப்பது. சீக்கிரம் வந்துவிடுவதாகக் கூறினாளே... ஏன் இன்னும் வரவில்லை? என்று மனம் பதைபதைத்தார். பதட்டத்தை மறைத்துக் கொண்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் வந்துவிடுவாள், மற்ற காரியங்கள் நடக்கட்டும் என்று பதட்டத்தை மறைத்துக் கொண்டு கூறினார். சரி ! முனிசிரேஷ்டர்களே ! யாகத்திற்கான பொருட்களை தயார்படுத்துங்கள் என்றார் புலஸ்தியர். பிரம்மாவுக்குள்ளோ, நடந்தவை நினைவாக ஓடியது. சரஸ்வதி நாம் இருவரும் எப்போதும் பிரியாது இணைந்திருக்கவேண்டும். நாம் ஈடுபடும் படைப்பு, கலை, கல்விப் பணியில் எவ்வித கெடுதலும் நேரக் கூடாது. அதற்கு மாபெரும் யாகம் நடத்தவேண்டும். இதோ... இந்தத் தாமரைமலர் பூலோகத்தில் எங்கு விழுகிறதோ அங்கு யாகத்தை நடத்துவோம் என்று, தாமரை மலரை சத்தியலோகத்தில் இருந்து எறிந்தேனே ! இப்போது இந்த இடத்தில் யாகசாலை அமைத்து இன்னும் சிறிது நேரத்தில் வேள்வி தொடங்க இருக்கிறது. நீராடிவிட்டு வருவதாகப் போன தேவி வரவில்லையே ! என்னாயிற்று அவளுக்கு? என நினைத்தவர் தன் மனக்கண்ணால் பார்த்தார். அங்கு தன்னை மறந்து நீராடிக் கொண்டிருக்கும் தேவியைப் பார்த்து கோபமுற்றார். அப்போது சரஸ்வதிக்கும் தன்னை யாரோ நினைப்பது ஞாபகத்திற்கு வரவே நீராடுவதை நிறுத்தி, யாகம் நடத்துவதற்கான முகூர்த்தநேரம் நெருங்கிவிட்டதே என்று அவசர அவசரமாக யாகம் நடக்கும் இடத்திற்கு ஓடிவந்தாள் சரஸ்வதி. அதற்குள், பிரம்மா முதலில் யாகத்தை நடத்து, தேவி வந்தால் நடந்ததைச் சொல்லிக் கொள்ளலாம் என்றனர் யாகத்திற்காக வந்திருந்தவர்கள்.

உரிய நேரமோ கடந்துவிடும்போல் இருந்தது. பிரம்மாவுக்கோ யாகத்தை விட்டுவிட மனதில்லை. எனவே தனது சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி காயத்ரி தேவியைப் படைத்தார். அவளைத் தன் துணைவியாக ஆக்கிக் கொண்டு யாக குண்டம் முன்பு தமது இடது புறமாக காயத்ரி தேவியை அமரச் செய்தார். புலஸ்தியரும் புனிதநீர் தெளித்து இருவருக்கும் கங்கணம் கட்டி வேத மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். அப்போது யாகசாலை வாசலை நெருங்கிய சரஸ்வதி திடுக்கிட்டு நின்றாள். தான் அமர வேண்டிய இடத்தில் தன் கணவர் அருகில் இன்னொரு பெண்ணா...! மனம் கொதித்தது. பிரம்மா இன்னொருத்திக்கு உபசாரம் செய்வதைப் பார்த்ததும் மனம் கொதித்தது. துடித்தது. யாகத்தை நிறுத்துங்கள் என்று கத்தவேண்டும் போலிருந்தது. ஆனால் உயிரற்ற ஜடம்போல் மவுனியாக சிலை போல் நின்றிருந்தாள் கலைமகள். யாகம் நல்லபடியாக முடிந்து வெளியே வந்த பிரம்மா, சரஸ்வதியிடம், தேவி ! நடந்ததற்கு வருத்தப்படாதே. எல்லாம் நமக்கு நல்லதுதான். வா.. என்று அழைத்தார். சரஸ்வதி அழுகையைத் தவிர வேறு பதில் சொல்லவில்லை.

அதைக் கண்டு விஷ்ணுவும், சிவபெருமானும், பிரம்மா செய்ததில் தவறில்லை. இப்போது யாக பலன் உங்களுக்கு கிடைத்துவிட்டதே ! தேவி கோபப்படாமல் நிதானமாக யோசித்துப் பாருங்கள்... உண்மை நிலை புரியும் என்றனர். இதைக் கேட்ட சரஸ்வதிக்கு கோபம் வந்து, பிரம்மாவே நீர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் படைத்து யாகத்தை நடத்தலாம் என்று அகந்தையுடன் நடந்துகொண்டீர். ஆகையால் உம்மை யாரும் பூலோகத்தில் கோயில் கட்டி வழிபடமாட்டார்கள் என்று சாபமிட்டாள். மேலும் விஷ்ணுவே, பிரம்மாவிடம் வேறு பெண்ணை மனைவியாக படைத்து யாகம் நடத்தியது தவறில்லை என்று வாதித்த நீர் உமது அழகான மனைவியைப் பிரிந்து வேதனைப்படுவீர் என்று இட்ட சாபம், ராமாவதாரத்தில் பகவான் தனது மனைவி சீதையைப் பிரிய நேரிட்டது. பிரம்மா செய்தது தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்திய ருத்திரரே ! பூலோகத்தில் உமக்கு உருவ வழிபாடில்லாமல் சுடுகாட்டுப் பித்தனாகி போகக் கடவது என்று சாபமிட்டாள். மும்மூர்த்திகளுக்கும் அவரவர் அவதாரநோக்கம் நிறைவேறவே இப்படி ஒரு சாபம் வந்தது நாமகளின் நாவில் இருந்து. அதனை உணர்ந்து உளமார ஏற்றனர் மும்மூர்த்தியரும். சரஸ்வதி நதியாக ஓடி தன் மனதை தானே குளிரச் செய்து கொண்டாள். பின் அந்தர்வாகினியாக மாறினாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar