Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோள் தீர்த்த விநாயகர்!
 
பக்தி கதைகள்
கோள் தீர்த்த விநாயகர்!

காலவ முனிவர் என்பவர் ஞான திருஷ்டியால் தனக்கு தொழுநோய் வரவிருப்பதை அறிந்து அதைத் தடுக்க என்ன பரிகாரம் செய்யலாம் என சிந்தித்தார். இறுதியில் ஐந்து அக்னிகளை (பஞ்சாக்னி) வளர்த்து நவகிரகங்களை பிரார்த்தித்து அதன் நடுவில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டார். அதனால் மனம் மகிழ்ந்த நவகிரகங்கள் அவர் முன்பு தோன்றி, முனி சிரேஷ்டரே! என்ன வரம் வேண்டும் தங்களுக்கு? என்று வினவினர். அதற்குக் காலவ முனிவர், என்னைத் தொழுநோய் தாக்காமல் இருக்க வரம் அளிக்க வேண்டும் என்று கேட்டார். நவகிரகங்களும் அப்படியே ஆகட்டும் என்று அருளினர். பிரம்மா இதைக் கேள்விப்பட்டு தாங்கொணாத கோபம் கொண்டார். உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் நான் தலைவிதி நிர்ணயிக்கும் போது அதை மாற்றியமைக்க இந்தக் கிரகங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது? அவர்களை உடனே அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

அதன்படி அவரின் உதவியாளர்கள் ஒன்பது கிரகாதிபதிகளையும் அழைத்து வந்து அவன் முன் நிறுத்தினர். என் கடமையில் குறுக்கிட நீங்கள் யார்? என்னைக் கலந்தாலோசிக்காமல் வரம் தந்த நீங்கள் தொழுநோயால் அல்லல்படுவீர்களாக ! காலவ முனிவருக்கு வந்திருக்க வேண்டிய தொழுநோய் உங்கள் அனைவரையும் பீடிக்கட்டும் ! என்று பிரம்மா சாபம் கொடுத்தார். நடுநடுங்கிய கிரகதிபதிகள், தங்களைக் கலக்காமல் நாங்களாகவே வரம் கொடுத்தது தவறுதான். எங்களை மன்னியுங்கள். சாப விமோசனத்துக்கு வழிகூறுங்கள் என்று அவரிடம் வேண்டினர். சாந்தமடைந்த பிரம்மா, நீங்கள் அனைவரும் பூலோகத்துக்குச் சென்று சிவபிரானை வணங்கிப் பிரார்த்தித்தால் வழி கிடைக்கும் என்று அருளினார். அதன்படி பூலோகம் வந்த ஒன்பது கிரகங்களும் எங்கு போய் சிவபிரானை பிரார்த்திப்பது என்பது தெரியாமல் திகைத்து நின்றனர். அப்போது அவர்கள் நின்ற வழியே வந்த அகத்திய முனிவர் அவர்கள் செல்ல வேண்டிய இடம் பற்றி வழிகாட்டி உபதேசித்தார்.

அவ்வாறே வெள்ளெருக்கங் காட்டுக்கு வந்தனர். ஆளுக்கொரு குளத்தில் நீராடி விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். பிறகு மங்களநாயகி சமேத பிராண நாதரை வழிபட்டு எருக்கம் இலையில் தயிர் அன்னம் நிவேதித்து அதை உண்டு பசியாறினர். பின்பு தங்கள் உடலை உற்று நோக்க பீடித்திருந்த தொழுநோய் பாதியளவில் குணமானதை அறிந்தனர். அடுத்த கணம் சிவபிரான் அவர்கள் முன் காட்சி கொடுத்து அவர்களின் நோயை முற்றிலும் குணமடையச் செய்து அருள் புரிந்தார். ஆடுதுறை அருகே உள்ள சூரியனார் கோயில் என்ற தலத்தில் உள்ள விநாயகரைத்தான் நவகிரகங்கள் பூஜித்தன. அதனாலேயே இந்த விநாயகருக்கு (கிரகம்) கோள் தீர்த்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்திலுள்ள நவகிரகங்களை அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அமைத்ததாக ஐதீகம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar