Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சமயோசிதமா பேசத் தெரியணும்!
 
பக்தி கதைகள்
சமயோசிதமா பேசத் தெரியணும்!

சிலருக்கு நாக்கிலேயே சனி இருக்கும். பேச்சாலேயே ஆபத்தான சூழ்நிலை வந்து விடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டாலும், சமயோசிதமாக பேசி சரி செய்து கொள்ள வேண்டும். பாண்டியநாட்டுப் புலவர் வடநாட்டுக்கு போனார். அங்குள்ள அரண்மனைக்குப் போய் ராஜாவைப் பற்றி தமிழில் அழகாக கவிபாடினார். அதை அங்கேயுள்ள  பல்மொழி அறிஞர் ஒருவர் மன்னருக்கு மொழி பெயர்த்து சொன்னார். மன்னருக்கு ரொம்பவே சந்தோஷம். நூறு ரூபாய் சன்மானம் கொடுத்தார். அடடா! டில்லிக்கு ராஜாவாய் இருந்தாலும், இந்த ஆசாமி வெறும்நூறைத் தானே கொடுத்தான்...சரி..சரி...எங்கு போனாலும் நம்மை வறுமை விடாமல் துரத்தும் போலும்! என நினைத்தவர், அங்கே பல்மொழி அறிஞர் நிற்பதைக் கவனிக்காமல், உப்பும் காயும் வாங்க போதும் என வாய் விட்டு சொன்னார்.

இதை அறிஞர் ராஜாவிடம் போட்டுக் கொடுத்து, ராஜா..ராஜா! நீங்கள் கொடுத்த சன்மானத்தை இவன் துச்சமாக பேசிவிட்டான், என்றார். ராஜாவுக்கு கடும் கோபம். உடனே பாண்டிநாட்டுப் புலவர்,ராஜா நான் சொன்னதை இந்த அறிஞர் தவறாகப் புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். ராஜாவான உங்களைப் புகழ்ந்ததால் தான் நூறு ரூபாய் கிடைத்தது. மற்றவர்கள் கொடுத்திருந்தால் அஞ்சோ, பத்தோ உப்பும், காயும் வாங்கும் அளவுக்கு மிகக்குறைவாகத் தான் கொடுத்திருப்பார்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன், என்றார். ராஜாவுக்கு இது மொழி பெயர்க்கப்பட்டதும், அவர் அகம் மகிழ்ந்து, என் தர்ம குணத்தை இவ்வளவு உயர்த்தியா பேசினீர், என்றதுடன், பத்தாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்து விட்டார். இப்போது புரிந்ததா! சமயோசிதமும் தலைகாக்குமென்று!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar