|
தெனாலிராமன் சிறுவனாக இருந்த காலத்திலேயே சிறந்த காளி பக்தராக விளங்கினார். இதுகண்டு மகிழ்ந்த காளிதேவி அவர் முன் தோன்றினாள்.சிறுவன் தெனாலிராமனிடம், இதோ! உனக்கு பால்சோறும், தயிர்சோறும் கொண்டு வந்திருக்கிறேன். பால்சோறு சாப்பிட்டால் அறிவு வளரும். தயிர்ச்சாதம் சாப்பிட்டால் செல்வவிருத்தி ஏற்படும். இப்போது சொல்.. உனக்கு எது வேண்டும்? என்றாள். தெனாலிராமன் அதிபுத்திசாலி. அம்மா! இரண்டையும் ருசி பார்க்கிறேன். எது பிடித்திருக்கிறதோ அதைச் சாப்பிடுகிறேனே!. அவர் என்ன செய்யப்போகிறார் என காளிக்குத் தெரியாதா என்ன! சிரித்தபடியே கிண்ணங்களை நீட்டினாள். அவள் எதிர்பார்த்தது போலவே, இரண்டு கிண்ணத்தில் உள்ளதையும் மாறி மாறி சாப்பிட்டு காலி செய்தார் தெனாலி. நமக்கு கிடைக்கிற நல்ல சந்தர்ப்பங்களைத் தவறவிடக்கூடாது. புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால், செல்வம் தானாக வந்து சேரும். |
|
|
|