Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தேர் எரிந்த மர்மம்!
 
பக்தி கதைகள்
தேர் எரிந்த மர்மம்!

பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி, அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!, என்றார்.  கிருஷ்ணா! நீங்கள் என்னை போரில் வெற்றி பெறச் செய்தீர்கள். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை தேரோட்டி வந்து கையைப் பிடித்து இறக்கி விடுவது என்றொரு சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டீர்களே! அப்படி செய்வது எனக்கும் பெருமைக்குரிய விஷயம் அல்லவா! நீங்களோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறீர்கள். இது என்ன நியாயம்?   அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தேரை விட்டு இறங்கு! என்றார் கண்டிப்புடன். வருந்தியபடி அவன் கீழிறங்கினான்.

அப்போது அவர், தேரின் பக்கத்தில் நிற்காதே அர்ஜூனா! சற்று தள்ளி நில்! என்றார் வேகமாக.  அர்ஜூனனால் கிருஷ்ணரின் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சியே காணாமல் போனது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான். வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், ஓடிச்சென்று இறுக கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது. உடனே கிருஷ்ணர், பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!, என்றார் புன்முறுவலுடன். தேர் ஏன் எரிந்தது? அர்ஜுனனுக்கு ஏதும் விளங்கவில்லை.  அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.

தேரை விட்டு நான் இறங்கியதும், அனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னிடம் கவுரவத்துடன் நான் நடக்கவில்லை என்று வருந்திக் கொண்டிருக்கிறாய். வெற்றி பெற்றதும் நான் என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. அது யாரிடம் இருந்தாலும் ஆபத்து தான். அழிவுக்கு அது வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே, என்று அறிவுரை கூறினார். தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar