Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனதை பலப்படுத்தும் வழி!
 
பக்தி கதைகள்
மனதை பலப்படுத்தும் வழி!

மன்னர் ஒருவருக்கு ஒரு மகன் பிறந்தான். அதேசமயம் அந்த நாட்டின் பட்டத்து யானையும் ஒரு குட்டியை ஈன்றது. ஒரே நாளில் பிறந்ததாலோ என்னவோ, இளவரசனுக்கு, குட்டியானை மீது அதிக அன்பு ஏற்பட்டது. எந்த அளவுக்கு என்றால் அந்த யானைக்குட்டியை அப்படியே கட்டிப்பிடித்து மேலே தூக்கிக் கொஞ்சும் அளவுக்கு, உங்களைப் போலவே அந்த நாட்டில் இளவரசனைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் அது ஆச்சரியமான விஷயமாகவே இருந்தது. நாட்கள் வளர வளர இளவரசன் வளர்ந்தான். யானைக்குட்டி, யானை ஆனது. ஆனால் இப்போதும் அவர்கள் பாசம் தொடர்ந்தது. சிறு வயது முதலே பழகிவிட்டதால் யானையின் எடை இளவரசனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. யானையைத் தூக்கி வைத்து விளையாடுவது அவனுக்குப் பழகிப்போனது. அது மட்டுமல்ல, யானையையே தூக்கிப் பழகியதால் கம்பீரமான கட்டுமஸ்தான அதீத பலம் உள்ளவனாக வளர்ந்தான் சின்னராஜா. காலம் மாறியது. இளவரசன் அரசனானான். குட்டியானை பட்டத்து யானை ஆயிற்று. அதன் பிறகு அந்த நாடு எதிரிகளே இல்லாத நாடாக மாறியது.

காரணம் என்ன தெரியுமா? யாராவது தனது நாட்டுடன் போர் புரிய வந்தால், அந்த எதிரி மன்னனை ஒருமுறை சந்திக்க அழைப்பர் நமது ராஜா. எதிரிமன்னர் வரும்போது இவர் எதுவுமே தெரியாதவர்போல் அவர் வந்ததையே கவனிக்காதவர்போல் யானையைத் தூக்கி வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். போர்புரியும் நோக்கத்தோடு வரும் எதிரி மன்னன் அதைப் பார்ப்பார். யானையைத் தூக்கி விளையாடுவதென்றால் எவ்வளவு பலசாலியாக இருக்க வேண்டும் என்பதை யோசிப்பார். அப்புறம் சண்டையாவது, பிரச்னையாவது..? விட்டால்போதும் என்று சமாதானக் கொடி பிடித்துவிட்டுப் போய்விடுவார். இப்படியே எதிரிகள் இல்லாத தேசமாகவே இருந்தது நாடு. மன்னரே இப்படி சமாளித்து விடுவதால், படைவீரர்கள் அசட்டையாக பயிற்சியே செய்யாமல் இருந்தனர். அப்படியே இருந்துவிட்டால் எப்படி? காலச் சக்கர சுழற்சியில் ஏதாவது பிரச்னை வர வேண்டாமா? வந்தது. ஒருசமயம், அரசன் தன் மனைவியின் பிறந்த நாட்டிற்குப் போயிருந்தபோது எதிரி மன்னன் ஒருவன் திடீரென்று போருக்கு வந்துவிட்டான்.

உடனே மன்னருக்குப் புறா மூலம் தகவல் அனுப்பினால் அது போய்ச்சேர இரண்டு நாள், மன்னர் புறப்பட்டுவர நான்கு நாள் என்று அநேகமாக ஆறேழு நாட்கள் ஆகிவிடும். வீரர்கள் பயிற்சியே இல்லாமல் இருப்பதால், அதற்குள் எதிரி மன்னன் நாட்டை ஸ்வாஹா செய்துவிடுவான். என்ன செய்வது? அவசர அவசரமாக யோசித்தார் மந்திரி. மன்னரைப்போலவே ஒருவனுக்கு அலங்காரங்கள் செய்யச் சொன்னார். அடுத்து அட்டையால் ஒரு யானை உருவம் தயாரானது. வழக்கமாக மன்னர் அனுப்புவதுபோல் தூது அனுப்பினார். அரசர்தான் நாட்டில் இல்லையே அது தெரிந்துதானே நாம் சண்டைக்கு வந்தோம். அப்புறம் எப்படி அவர் திரும்பி வந்திருப்பார்..? என நினைத்தபடியே வந்தார் எதிரி மன்னர். வந்தவரை வரவேற்றார் அமைச்சர். எங்கள் மன்னருக்கு தொற்றும் ஜுரம் பாதித்து இருப்பதால் திரைச்சீலைக்குப் பின்புறம் இருக்கிறார். உங்களை உரியபடி உபசரிக்கச் சொல்லியிருக்கிறார் என்றார். சரியாக அதே சமயத்தில் மன்னர் வேடமிட்ட வீரன், திரைச் சீலைக்குப் பின்புறம் நின்று அட்டை யானையைத் தூக்கினான். அவன் நிழல் திரையில் தெரிந்தது. எதிரிமன்னன் அதைப் பார்த்தான் மனம் சோர்ந்து போனது, அவன் முகத்திலேயே தெரிந்தது. அடுத்த நிமிடமே மந்திரி எதிர்பார்த்த விஷயம் நடந்தது. ஆமாம்.. சமாதானக் கொடி காட்டிவிட்டுத் திரும்பினான், எதிரி நாட்டு அரசன். பெரும் படையோடு யுத்தத்திற்குத் தயாராக வந்த எதிரி மன்னனை பலவீனம் ஆக்கியது எது? அவன் மனம் சோர்ந்து போனது எதனால்? உங்கள் மனமும் இப்படித்தான் பல சமயங்களில் சோர்ந்து போகிறது. உங்கள் பலவீனத்தை விட்டுவிட்டு பலமுடன் இருங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar