Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பயமா எனக்கா அப்படீன்னா!
 
பக்தி கதைகள்
பயமா எனக்கா அப்படீன்னா!

எமலோகத்தில் எமதர்ம ராஜனின் அரசாட்சி நடந்து கொண்டிருந்தது. பூலோகத்திலிருந்து கொண்டு சென்ற ஜீவராசிகளை எமகிங்கரர்கள் ஒவ்வொன்றாக ராஜாவுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவரவர் செய்த குற்றத்திற்கு தக்கபடி அவன் தண்டனை விதித்துக் கொண்டிருந்தான். அப்போது எந்த முன்னறிவிப்புமின்றி வியர்க்க விறுவிறுக்க ஒரு மனிதனும், ஒரு பாம்பும் அந்த இடத்தில் வந்து நின்றனர். எனக்கு முன்னால் திடீரென்று வந்து நிற்கும் யார் இவர்கள்? இவர்களை இங்கு கொண்டு வந்தது யார்? என எமன் கோபமாக கத்தினான். எமகிங்கர்களோ தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றனர். உடனே எமன், சித்திரகுப்தனை கூப்பிட்டு, சித்ரகுப்தா! இவர்களது ஆயுட்காலம் முடிந்துவிட்டதா என கணக்கு புத்தகத்தைப் பார் என்றார். சித்ரகுப்தனும் பார்த்து விட்டு இல்லை பிரபு, இவர்களுடைய ஆயுட்காலம் முடியவில்லை என்றார். இது என்ன ஆச்சர்யம், நீங்களாகவே என்னைத் தேடி வந்துவிட்டீர்களா என்ன? என்று அவர்களை நோக்கி கேட்டான். ஆம், பிரபுவே என்று இரு ஜீவன்களும் தலையசைத்தன. இங்கு வரவேண்டுமென்றால் நீங்கள் இறந்திருக்க வேண்டுமே, உங்களை யார் கொன்றது என்று வினவினார். எங்களை நாங்களே சாகடித்துக் கொண்டோம் என்றனர்.

வேடிக்கையாகத்தான் இருக்கிறது, இந்த விபரீதம் எப்படி நிகழ்ந்தது என்று விளக்கமாகக் கூறுங்கள் என்றார் எமன். உடனே மனிதன் ஒருநாள் இரவு கையில் விளக்குடன் வயல்வெளிக்குச் சென்று கொண்டிருந்தேன். வரப்பின் மேல் கிடந்த கயிறைப் பாம்பென்று நினைத்து பயந்து அலறி குதித்தேன். அப்படி குதித்த இடத்தில் நிஜமாகவே இருந்த இந்தப் பாம்பு என்னைக் கடித்து விட்டது என்றான். இவன் குதித்தில் என் தலை நசுங்கி விட்டது என்றது பாம்பு. மனிதனைக் கண்டால் தன்னை அடித்து விடுவானோ என்று பாம்புக்கு பயம், பாம்பைக் கண்டால் தன்னைக் கடித்து விடுமோ என மனிதனுக்கு பயம். இவர்கள் இருவருக்கும் தங்களுக்குள் இருந்த பயமே இவர்களை கொன்று விட்டது என்று விளக்கினான் சித்ரகுப்தன். அப்படியென்றால் என்னை விடவும் கொடியது போல இந்த பயம் என எமதர்மன் சிரித்துக் கொண்டே கூறினான். எதற்கும் பயப்படாதீர்கள், கடவுள் நமக்கு துணை இருக்கிறார் என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பின் இதற்காகவா நாம் பயந்தோம் என உங்களைக் கண்டு நீங்களே வெட்கப்படுவீர்கள். பயத்தை விரட்டி விட்டீர்களானால் உங்களை வெல்பவர் யாரும் உலகில் இல்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar