அலெக்சாண்டர் உலகையே நடுநடுங்க வைத்த மாமன்னன். தன்னை விட உயர்ந்த வீரன் யாருமில்லை என்ற மமதை கொண்டிருந்தான். ஒருநாள், ஆற்றங்கரைக்கு வந்தான். கரையோர மணலில், ஒரு துறவி மட்டும் படுத்திருந்தார். கால் மேல் கால் போட்டு, ஒய்யாரமாக உயர்த்தி வைத்துக் கொண்டிருந்த அவரருகே வந்தவன்,நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன், என்றான். அதற்கென்ன! இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்? குளிர் அதிகமாக இருக்கிறது.
வெயிலில் படுத்திருக்கிறேன்,. சரி...உமக்கு பொன், பணம், மாளிகை தருகிறேன்! இப்படி வெட்ட வெளியில் படுக்க வேண்டாம். அதைக் கொண்டு சொகுசாக உறங்கலாம், . அதெல்லாம் வேண்டாம்! ஒரே ஒரு உதவி போதும்! என்ன! கொஞ்சம் ஒதுங்கி நில். உன் நிழல் வெயிலை மறைக்கிறது,. அலெக்சாண்டர் போய் விட்டான். முற்றும் துறந்தவர்கள், ஆசையே இல்லாதவர்கள் எந்த சக்தியைக் கண்டும் அச்சப்படுவதில்லை.