தன் மனைவி தமயந்தி, காட்டில் தன்னுடன் கஷ்டப்படுவதைப் பார்த்து, நளன் கண்ணீர் வடித்தான். அவளை ஒருவழியாக பிரிந்து விட்டான். அவன் தனியாக காட்டிற்குள் சென்ற போது, ஓரிடத்தில் நெருப்பு பற்றி எரிவதைக் கண்டான். அதற்குள் சிக்கிக் கொண்டிருந்த பாம்பு""ஐயோ! காப்பாற்று! என்று கதறியது. இரக்கப்பட்ட நளன் பாம்பைத் தூக்க, அது அவனைக் கடித்து விட்டது. நளனின் நிறம் கருப்பாகி விட்டது. ""உன்னைக் காப்பாற்றிய என்னைக் கடித்து விட்டாயே! என நளன் வருந்தினான்.
எல்லாம் நன்மைக்கே, என்ற பாம்பு நடக்க விருக்கும் நிகழ்ச்சிகளை எடுத்துச்சொல்லி மறைந்து விட்டது. பாம்பின் விஷம் நளனின் உடலுக்குள் புகும்போது, அவனைப் பற்றியிருந்த சனீஸ்வரனும் அவஸ்தைப்பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனிக்கே சோதனை வந்து விட்டது. அவரும் அந்த விஷத்தால் கருப்பாகி விட்டார். இதனால் தான், சனிக்கு கருப்பு வஸ்திரம், கருப்பு எள், நீலக்கல் ஆகியவை ஒதுக்கப்பட்டிருக்கின்றன.