|
குருநானக் அவர்களைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். எங்கு சென்றாலும் மக்கள் அவரைப் பின்தொடர்வதைக் கண்ட ஒருவர், குருநானக் அவர்களே, உங்களைப் பின் தொடர்ந்து வருபவர்கள் எல்லாம் உங்களது கொள்கைகளைக் கடைபிடிக்கும் சத்தியவான்களா? என்று கேட்டார். குருநானக், அவரிடம், நீ என்னைப் பின்தொடர்ந்து வா ! என்று கூறினார். அவரும் குருநானக்கைப் பின்தொடர்ந்தார். சிறிது நேரத்தில் வானிலிருந்து சில செப்புக்காசுகள் விழுந்தன. உடனே குருநானக்கைப் பின் தொடர்ந்தவர்களில் பலர் அவற்றை எடுத்துச் சென்றனர். சிறிது தூரம் நடந்ததும் வானிலிருந்து வெள்ளிக் காசுகள் விழ, இன்னும் சிலர் அவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினர். பிறகு பொற்காசுகள் விழுந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு குருநானக்குடன் இருந்த எல்லோரும் போய்விட்டனர். மிஞ்சியவர் குருநானக்கிடம் கேள்வி கேட்டவர் மட்டுமே ! இப்போது குருநானக் கூறினார். யார் ஒருவர் எந்தப் பற்றும் இல்லாது என்னைத் தொடர்கிறாரோ, அவரே சத்தியவான். இப்போது நீ மட்டுமே என்னுடன் இருக்கிறாய், நீதான் சத்தியவான் ! என்றார். கேள்வி கேட்டவர், குருநானக்கை வணங்கி அவரது சீடர் ஆனார். |
|
|
|