Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » மனசை ஜெயிக்க முடியாது!
 
பக்தி கதைகள்
மனசை ஜெயிக்க முடியாது!

இந்த உலக வாழ்க்கையை உண்மை என்று நம்புவதையே, ஆன்மிகத்தில் மாயை என்பார்கள். வியாசர் தன் சீடர்களிடம், சிஷ்யர்களே! இந்த உலக வாழ்வு உண்மையென நம்பாதீர்கள். இறைவன் மட்டுமே உண்மை என நம்புங்கள். பரந்தாமனின் நாமம் சொல்லுங்கள். இவ்வுலக வாழ்வில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால், அது சுலபமானதல்ல. நாம் தனித்திருந்து தவம் செய்ய வேண்டும். வாருங்கள், பல இடங்களுக்கு யாத்திரை
செல்வோம், என்று கூறி புறப்பட்டார். வியாசரின் 12 சீடர்களில், ஜெயமுனி என்ற சீடன் மட்டும் வர மறுத்தான். ஏன் வரமாட்டேன் என்கிறாய்?  நான் தான் மனதை ஏற்கனவே வென்று விட்டேனே! வெல்லாத சீடர்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,.

அதெப்படி வென்றிருப்பாய், உனக்கு  அந்தளவு பக்குவம் வரவில்லையே! குருவே!நான்சொல்வதுஉண்மை... உண்மை... உண்மை. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்,. சிஷ்யன் பிடிவாதமாகச் சொன்னதால்,  வியாசர் அவனை ஆஸ்ரமத்திலேயே விட்டுவிட்டு, மற்றவர்களை அழைத்துச் சென்றார். ஒருவாரம் கழிந்து ஆஸ்ரமத்துக்கு ஒரு இளநங்கை வந்தாள். அவள் அழகில்  சிக்கிப்போனான் ஜெயமுனி. உன்னைத் திருமணம் செய்ய என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கிறேன், என காதல்மொழி பேசினான். அவ்வளவுதான்! அப்பெண் படபடவென ஆடைகளை அவிழ்த்தாள். அங்கே வியாசர் நின்றார். அவர் தான் பெண் வேடமிட்டு வந்தார். சிஷ்யா! நீ மனதை வென்ற லட்சணம்  இதுதானா! வா என்னோடு, என அதட்டினார். வாய் பொத்தி அவர் பின்னாலேயே கிளம்பி விட்டான் சீடன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar