Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பசித்தாலும் ஆசைப்படாதீர்!
 
பக்தி கதைகள்
பசித்தாலும் ஆசைப்படாதீர்!

கான்கள், தானம் கூட பெறுவதைக்கூட மறுத்து விட்டனர் என்கிறதுமகாபாரதம். கஷ்யபர், அத்திரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், கவுதமர் என்ற முனிவர்களும், வசிஷ்டரின் மனைவி அருந்ததியும், இவர்களின் வேலைக்காரனான பசுசகன், அவன் மனைவி கண்டையும் பிரம்மலோகத்தை அடைய விரும்பி யாகம் செய்ய முயன்றனர். ஆனால், அந் நேரத்தில் கடும் பஞ்சம் ஏற்படவே, சாப்பாட்டுக்கே பிரச்னையாயிற்று. அந்நேரத்தில், விருஷாதர்ப்பி என்பவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன், முனிவர்களுக்காக  அமைச்சர் மூலம் அத்திப்பழங்களை கொடுத்து அனுப்பினான். அதை கையில் எடுத்ததுமே அத்திரி கீழே வைத்து விட்டார். அமைச்சரே! பழத்திற்குள் உன் அரசன் தங்கக் காசுகளை வைத்து எங்களை சோதிக்க நினைக்கிறானோ மன்னன்! இதை கொண்டு செல், என்றார். வசிஷ்டர் அமைச்சரிடம், அளவுக்கு மீறி தானம் பெறுபவன் இழிந்த நிலையை அடைவான், என்றார்.

எல்லாருமே, அதைப்பெற மறுக்க அமைச்சர் திரும்பி விட்டார். தனது சன்மானத்தை ஏற்க மறுத்த முனிவர்களைக் கொல்ல ஒரு பூதத்தை ஏவினான். அது யாதுதானி என்ற அரக்கியாக கொல்ல புறப்பட்டது. இந்நேரத்தில், சுனங்சசன் என்ற முனிவரை, ஏழு ரிஷிகளும் சந்தித்தனர். அவர் பருமனாக இருந்தார். வேதம் ஓதுவது உள்ளிட்ட எந்த ஆன்மிகப் பணியும் செய்யாமல், சாப்பிட்டு  கொண்டே இருப்பதால் தான், பருமனாக இருக்கிறார். சரியான சாப்பாட்டு ராமன் என்ற முடிவுக்கு வந்தனர். அவரிடம் தங்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டனர்.  சுனங்சசன் ஒரு குளக்கரைக்கு அனுப்பிச் சென்றார். அங்கே, அரக்கி யாதுதானி குளப் பாதுகாப்புக்காக அமர்ந்திருந்தாள். அவளிடம் முனிவர்கள், எங்களுக்கு பசிக்கிறது. இந்தக் குளத்திலுள்ள தாமரைக் கிழங்குகளை எடுக்க அனுமதி கொடு, என்றனர்.யாதுதானியும், முனிவர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்குரிய விளக்கத்தைச் சொன்னால், குளத்துக்குள் இறங்க அனுமதிப்பேன், என்றது. முதலில் அத்திரி, நான்தினமும் 3 முறை அத்தியயனம் (மந்திர பாராயணம் அல்லது பிரார்த்தனை) செய்பவன். இரவில் அத்தியயனம் செய்யாமல் தூங்க மாட்டேன். அதனால் என் பெயர் அத்திரியாயிற்று, என்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்கு விளக்கம்அளித்து குளத்தில் இறங்கினர். கடைசியாக சுனங்சசன் அரக்கியிடம் வந்தார். அரக்கியே! என் பெயர் சுனங்சசன்...பெயர் விளக்கம் தெரியாது.. என்று ஆரம்பிக்கவும், யாதுதானி குறுக்கிட்டாள். உங்கள் பெயர் வாயில் நுழையவே மறுக்கிறது. திரும்பச் சொல்லுங்கள், என்றாள். உடனே கோபமடைந்த சுனங்சசன், என் பெயரை ஒரே தடவையில் நினைவில் வைக்காத நீ அழிந்து போ, என்று தன் திரிதண்டத்தை நீட்டினார். யாதுதானி சாம்பலாகி விட்டாள். இதற்குள் மற்ற முனிவர்கள் கிழங்குகளைப் பறித்து வந்து கரையில் கொட்டினர். மீண்டும் நீராட குளத்திற்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்த்தபோது கிழங்குகளைக் காணவில்லை.  எல்லா முனிவர்களும் கிழங்கை எடுத்தவருக்கு உலகிலுள்ள அத்தனை கேடு கெட்ட செயல்களின் பாவமும் பிடிக்கட்டும் என்று சாபமிட்டனர். சுனங்சசன் மட்டும், கிழங்கை எடுத்தவருக்கு புண்ணியம் சேரட்டும், என்றார். இதிலிருந்து கிழங்கைத் திருடி சாப்பிட்டது சுனங்சசன் தான் என்ற முடிவுக்கு வந்த முனிவர்கள், நீர் தானே திருடினீர், என்றனர். ஆம்.. என்ற சுனங்சசன், இந்திரனாக மாறி அவர்கள் முன் நின்றார். பசித்த காலத்திலும், ஆசைப்படாத அவர்களைப் பாராட்டி சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி வைத்தார். இப்போது சொல்லுங்கள்! பசித்தால் திருடுவது என்பது நியாயம் தானா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar