Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இது எப்படி மரணமாகும்?
 
பக்தி கதைகள்
இது எப்படி மரணமாகும்?

நடுத்தர வயதுள்ள காமாட்சி தன் குடிசை வாசலில் அமர்ந்துஇருந்தாள். அவளைக் காண வந்தாள் அருகில் வசிக்கும் கனகவல்லி. அவள் அழகுப்பதுமை. மூதாட்டியின் மகன் சரவணன் மீது அவளுக்கு ஒரு கண். அவனும் கட்டழகன். மாவீரன். அம்மா! தங்கள் மகனை இரண்டு நாட்களாகக் காணவில்லையே! எங்கே போய் இருக்கிறார்? என்றாள் கனகா. அவள் தன் மகனை காதலிக்கிறாள் என்ற விஷயம் காமாட்சிக்குத் தெரியும். இருப்பினும், காட்டிக் கொள்ளாமல், அவன் வீரனாயிற்றே! போர்க்களத்தில் எதிரிகளை பந்தாடிக் கொண்டிருப்பான்.  தன் உயிர் கொடுத்தேனும் நாட்டைக் காப்பவன் அவன்,. காதலனின் பெருமை கேட்ட கனகா மகிழ்ந்தாள். புன் முறுவலுடன் அவள் கிளம்பிய வேளையில், சில போர்வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.

காமாட்சி அவர்களிடம், என் மகனைக் கண்டீர்களா? என்றாள். தாயே! வீர மகனைப் பெற்றவர் நீங்கள். எதிரிகள் நூறு பேராவது அவன் வாளுக்கு இரையாகி யிருப்பர். ஆனால், அற்பபுத்தி கொண்ட எதிரி ஒருவன் அவனை வஞ்சகமாகக் கொன்று விட்டான், என்றனர். கனகா ஓடிவந்து காமாட்சியை அணைத்துக் கொண்டு அழுதாள். அவரல்லவோ என் கணவர் என இருந்தேன்! என வாய்விட்டுக் கதறினாள்.  காமாட்சி அவளைத் தேற்றினாள். இல்லை மருமகளே! அவன் இறக்கவில்லை. எல்லா மரணமும் மரணமல்ல. அவன் நாடு காக்க இறந்தான். நாட்டைக் காக்கும் பணியில் மரணமடைபவர்கள் மக்கள் இதயங்களில் என்றும் வாழ்வார்கள்,. காமாட்சியும் அழுதாள்... ஆனால், வழிந்தது ஆனந்தக் கண்ணீர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar