Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » எங்கிருந்தாலும் வெற்றி!
 
பக்தி கதைகள்
எங்கிருந்தாலும் வெற்றி!

மன்னர் திருதராஷ்டிரனுக்கு துரோணாசாரியார் மீது சந்தேகம்! அதை அவரிடமே கேட்டு விட்டார். துரோணரே! பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் ஒரே விதத்தில் பாடம் நடத்துவது தானே நல்ல குருவின் இலக்கணம்?   உண்மை தான் மன்னா!, என்றார் துரோணர்.  நீங்களும் நல்ல குருவாக விளங்கவேண்டும் என்பது என் ஆசை  என்றதும், மன்னர் சுற்றி வளைத்து என்ன சொல்கிறார் என்பதை யூகித்துக் கொண்டார் துரோணர். தனது பிள்ளைகளான கவுரவர்கள், தம்பி பிள்ளைகளான பாண்டவர்களை விட கல்வி, வித்தையில் பின்தங்கி இருந்ததால், மன்னர் இப்படி கேட்கிறார் என்று துரோணர் புரிந்து கொண்டார்.  மன்னா! படிக்கும் ஆர்வத்தைப் பொறுத்து வித்தியாசம் ஏற்படுகிறது, என்று பதிலளித்தார். மறுநாள் காலையில் பாண்டவர்களும், கவுரவர்களும் துரோணர் ஆஸ்ரமத்தில் ஒன்று கூடினர்.

 சீடர்களிடம், இன்று அரிதான ஒரு கலையை நடத்தப் போகிறேன். வனப்பகுதிக்கு சென்று பயில்வோம், என்றார் துரோணர்.  செல்லும் வழியில் ஆற்றங்கரை மணலில் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். இந்த ஸ்லோகத்தை ஜெபித்து, பாணத்தை விட்டால் இந்த வனமே சாம்பலாகும், என்று சொல்லி அம்பைக் கையில் எடுத்தார். அர்ஜூனா! ஆஸ்ரமம் சென்று என் கமண்டலத்தை எடுத்து வா! என்றார்.  முக்கியமான பாடம் நடக்கிற வேளையில், நமக்கு ஆசாரியார் வேறு ஏதோ வேலை கொடுக்கிறாரே என்று எண்ணிய அர்ஜுனன், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான்.  அதேநேரம் அவனது மனம், அந்த ஸ்லோகத்தையே நினைத்தது. கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். அதற்குள் அனைவரும் வனத்திற்குள் சென்றுவிட்டனர். அர்ஜூனனும் ஆற்றைக் கடந்து அங்கு வந்த போது, சீடர்களே! ஒரு நல்ல வித்தையை இப்போது தெரிந்து கொண்டீர்கள் என்று துரோணர் சொன்னது அவன் காதில் விழுந்தது. 

இந்த வித்தையைக் கற்றுக் கொள்ள முடியாமல் போனதே என வருந்தினான்.  துரோணர் அவனிடம் கமண்டலத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, ஏறிட்டும் பார்க்கவில்லை.  ஒவ்வொருவராக ஸ்லோகம் சொல்லி பாணம் விடுங்கள்! யார் பாணம் வனத்தை எரிக்கிறது பார்க்கலாம்! என்றார் துரோணர். கவுரவர்களும், மற்ற பாண்டவர் களும் முயற்சித்தனர். ஸ்லோகத்தைச் சொல்வதிலேயே பிழைகள் ஏற்பட்டது. உங்களுக்கு பாடம் நடத்தி வீணாகி விட்டதே! என குரு கோபித்தார். அப்போது அர்ஜூனன், குருவே! தாங்கள் ஆணையிட்டால், முயற்சிக்கிறேன், என்றான்.  இதென்ன வேடிக்கை! பாடம் கேட்ட எங்களாலேயே முடியவில்லை. உன்னால் எப்படி? என அனைவரும் அவனைக் கேலி செய்தனர். ஆனால், அர்ஜூனன், மனஉறுதியுடன் ஸ்லோகம் ஜெபித்து பாணம் தொடுத்தவுடன் தீப்பற்றியது. உன்னால் எப்படி சாதிக்க முடிந்தது அர்ஜுனா? என்றார் துரோணர். குருவே! நீங்கள் எழுதிய ஸ்லோகத்தை நன்கு படித்தேன். கமண்டலத்தை எடுக்கச் சென்றபோது மனனம் செய்தேன். இப்போது முயற்சித்தேன் என்றான். மகிழ்ச்சியுடன் தழுவிக்கொண்ட துரோணர், அர்ஜூனா! ஆர்வம் உள்ளவனை வெற்றி எங்கிருந்தாலும் தானாக தேடி வரும் என்பதற்கு நீ உதாரணம், என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar