Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஓயாமல் ஏமாறலாமா?
 
பக்தி கதைகள்
ஓயாமல் ஏமாறலாமா?

இன்றைய தினம் கோழி, மரம், இரட்டிப்பு பணம், தவணைத்திட்டம் என்ற பெயரில் ஏதாவது ஒருமோசடியை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தாலும், மக்கள் ஏனோ மீண்டும் மீண்டும் ஆசைக்குழியில் சிக்கி தங்கள் பொருளை இழக்கிறார்கள்.  ஒரு சிங்கம் காட்டிலுள்ள விலங்குகளை தாறுமாறாக அடித்து சுவைத்து வந்தது. அதற்கு பாடம் கற்பிக்க எண்ணிய நரி,சிங்கராஜாவே! நாளை தாங்கள் என்னைச் சாப்பிட்டு மகிழலாம். நீங்கள் இறைக்க இறைக்க ஓடியே மற்ற மிருகங்களைக் கொன்றீர்கள். நான் அப்படி செய்ய விரும்பவில்லை. நானாகவே முன்வந்து உங்கள் விருந்தாகிறேன். என் இல்லத்துக்கு வாருங்கள், என்றது.சிங்கமும் நரியைப் பாராட்டி மறுநாள் சென்றது. நரி ஒரு கிணற்றின் மேல் மெல்லிய துணியை விரித்து தயாராக வைத்திருந்தது.

சிங்கம்வந்ததும், ராஜாவே! இந்த விரிப்பின் மேல் அமருங்கள், என்றது.சிங்கமும் தனக்குமரியாதை தருவதாக எண்ணி, அதன் மேல் பாய்ந்து ஏறவே, துணியோடு சேர்ந்து கிணற்றுக்குள் விழுந்தது. ஆனால், உள்ளே குறைந்த தண்ணீரே இருந்ததால் தப்பித்துக் கொண்டது.எப்படியோ சுவரைப் பற்றி வெளியே வந்துவிட்டது. இதைப் பார்த்த நரிபுதருக்குள் மறைந்து கொண்டது.சில மாதம் கழித்து, மீண்டும் சிங்கத்தை சந்தித்த நரியிடம் சிங்கம் பாய்ந்தது.ராஜாவே! தவறாகநினைக்க வேண்டாம். நான் நல்ல எண்ணத்தில் தான் துணி விரித்து வைத்தேன். ஆனால், உங்கள் பலம் தாங்காமல் உள்ளே விழுந்து விட்டது. தாங்கள் பலசாலியல்லவா? என்று புகழ்ந்தது.வாருங்கள்! நான்உங்களுக்காக படகு கொண்டு வந்துள்ளேன். படகில்மிதந்தபடியே என்னைச் சாப்பிடுங்கள், என்றது. சிங்கமும் ஆற்றுக்குச்சென்று தண்ணீரில் கிடந்த மரக்கட்டை போன்ற ஒன்றின் மீது கால் வைத்துபடகில் பாய முயன்றது. உண்மையில் அது கட்டை அல்ல! ஒரு முதலை! அது சிங்கத்தை லபக்கென கவ்வி விழுங்க ஆரம்பித்து விட்டது.நரி ஹாயாகப் புறப்பட்டது. ஒருமுறை ஏமாறலாம்.ஓயாமல் ஏமாறலாமா?


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar