அசோகவனத்தில் மரத்தடியில் சாய்ந்திருந்தாள் சீதை. அவள் மனம்ராமனையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்தநேரம் குளவி ஒன்றுஅவளருகே ரீங்காரமிட்டபடி பறந்து வந்தது. தான் கட்டிய மண் கூட்டுக்குள் ஒரு புழுவை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது. மண்ணில் சிக்கிய புழு நகர முடியாமல் தவித்தது. சீதையால் இதை சகிக்க முடியவில்லை. அருகில்இருந்த விபீஷணனின் மகள் திரிசடையிடம்,ஏன் இந்த குளவி இப்படி செய்கிறது?, என்றாள். அவளோ அலட்டிக் கொள்ளாமல்குளவின்னா அப்படித் தானம்மா செய்யும்.புழுவைக் கொட்டி கொட்டி வேதனைப்படுத்தும். இதை சிந்தித்தபடியே, புழு குளவியாக மாறிவிடும். இதில் ஒன்றும்புதுமையில்லை, என்று விளக்கம் தந்தாள்.
சீதை அழத்தொடங்கினாள். இதென்ன வம்பாப் போச்சு!, என்று திரிசடை பதறினாள். கண்ணைத் துடைத்தபடி சீதை, நானும் இரவும்பகலும் என் கணவர்ராமனையே சிந்திக்கிறேன். புழு குளவியாக மாறுவது போல நானும் ராமனாக மாறிவிட்டால், இரண்டு ராமர் அல்லவா இருப்போம்!என்று வருந்தினாள். ஒன்றும் கவலையே படாதீர்கள். ராமனாகமாறுவதும் நன்மைக்குத் தான். ராமரும் உங்களையே சதா மனதில் அசை போட்டபடியே உங்களுக்காக சீதையாகிவிடுவார். அப்போதும்ராமருக்காக ஒரு சீதைதானிருப்பாள். அப்போதும் மணமொத்த தம்பதியாகத் தான் இருப்பீர்கள், என்று அவள் போக்கிலேயே சென்று ஆறுதல் அளித்தாள் திரிசடை.