வேதம், உபநிஷதம், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், பகவத்கீதை போன்ற தத்துவங்கள் எல்லாம் தர்மத்தைஉபதேசிக்கின்றன. தர்மம் என்றால் என்ன?ஒருமுறை பீர்பாலிடம் இந்த கேள்வியைக் கேட்டார் பேரரசர் அக்பர். சிறிதும்யோசிக்காமல். சட்டென்று பிறருக்கு எதைச் செய்கிறோமோ அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும். நல்லது செய்தால் நன்மை வரும். தீமை செய்தால் தீமையே உண்டாகும். இதுதான் உலக தர்மம், என்றார்.
இதையே புலவர் கணியன்பூங்குன்றனார்,தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றுபுறநானூறில் பாடினார். அந்தக்காலத்தில்பூமராங் என்ற அம்பு இருந்தது. குறிப்பிட்ட இலக்கை அடைந்த வேகத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடும். ஒருவர் செய்த செயல்களும் அப்படித் தான் என்கிறது தர்மசாஸ்திரம்.தர்மப்படி நடந்தால் நமக்கும் அதன்படியே நடக்கும். தர்மத்தை மீறி நடந்தால், அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.