பாலியல் தொந்தரவு குறித்த செய்திகள் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் ஆணோ, பெண்ணோ...அவரவர் மனதுக்குள் லட்சுமண ரேகையை வரைந்து கொள்ள வேண்டும். ஏன்?மாரீசன் என்னும் மாயமானைத் துரத்திச் சென்றார் ராமபிரான். மனைவிமார் கணவரிடம் எதையாவது கேட்டு நச்சரித்துக் கொண்டே இருக்கக்கூடாது. ஆனால், சீதாதேவி கணவரிடம் எப்படியாவது தனக்கு அந்த மான் வேண்டுமெனக் கேட்டாள். மனைவி சொல் மந்திரமாயிற்றே! ராமன் கிளம்பினார்.அருகில் இருந்த லட்சுமணன் அண்ணனைத் தடுத்தான்.அண்ணா! தங்கள் சொல்லுக்கு மறுசொல் பேசுபவனல்ல இந்தத்தம்பி. ஆனால், இது மட்டும் வேண்டாம். இந்த உலகத்தில் தங்கமான் என்று ஒன்று இருந்ததாக சரித்திரம் இல்லை. இயற்கைக்கு முரணான ஒன்று இருப்பதாக நினைப்பது தவறு.
இதில், ஏதோ சூது இருக்கிறது. போகாதீர்கள், என்றான்.தன் மைத்துனனின் கருத்தையும் சீதாதேவி ஏற்கவில்லை. வயதிலோ, பதவியிலோ சிறியவராயினும், சொல்லும் கருத்து சரியாக இருந்தால், அதை பெரியவர்கள் ஏற்க வேண்டும். இந்த இடத்திலும், லட்சுமணனின் கருத்து மீறப்பட்டது. விளைவு, அந்த மாயமான் ராமனை எங்கோ இழுத்துச் சென்று விட்டது.நீண்டநேரமாக ராமனைக் காணவில்லை. சீதாதேவிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதை அதிகப்படுத்தும் வகையில் ஹே சீதா! ஹே லட்சுமணா! என்ற அபயக்குரல் கேட்டது. ராமபாணத்தில் சிக்கிய மாரீசன் தான் அப்படி ஓலமிட்டான். ஆனால், ராமனுக்கு தான் ஏதோ ஆபத்து என தவறாகப் புரிந்து கொண்ட சீதா, தன் மைத்துனனிடம் கடுஞ்சொல் கூறி, அண்ணனை அழைத்து வருமாறு கூறினாள்.அப்போதும் லட்சுமணன் அவளுக்கு நன்மையே செய்தான்.அன்னைக்கு நிகரான அண்ணியே! தயவுசெய்து, இந்தக் கோட்டை தாண்டி வெளியே வராதீ