புத்தரின் தலைமை மடாலயம் துறவில் தேர்ந்த சீடர்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சீடர் பூர்ண காஷ்யபா புத்தரிடம், நான் எங்கு செல்லட்டும்? என்று கேட்டார் நீயே தேர்வு செய்! என்றார் புத்தர். காஷ்யபா ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லவும், அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் புத்தர். அங்கே ஏராளமான முரடர்கள் உண்டே! சின்னப் பிரச்சனைகளுக்கும் அடிதடி பண்ணுவார்களே! அங்கேயா செல்கிறாய்? எனக் கேட்டார் புத்தர்.
ஆம் அங்கேதான்! என்றார் காஷ்யபா. சரி அப்படியானால் உன்னிடம் மூன்று கேள்விகள்... என்ற புத்தர் தொடர்ந்து கேட்டார். அங்கே உன்னை வரவேற்காமல் அவமானப் படுத்தினால்? நல்லவேளை அடிக்கவில்லை! மிகவும் நல்லவர்கள் என்று கருதுவேன். அடித்து உதைத்தால்? நல்லவேளை கொல்லாமல் விட்டார்களே! மிக நல்லவர்கள் என்று கருதுவேன். உன்னைக் கொன்றால்? மூன்றாவது கேள்வியையும் கேட்டார் புத்தர். ஆஹா மொத்தமாக இந்த வாழ்க்கையில் எனக்கு சுதந்திரம் தந்தார்களே என நன்றி கூறி பிரார்த்திப்பேன் என்றார் காஷ்யபா. நல்ல மனமுதிர்ச்சி உலகின் எந்த மூலைக்கும் செல்ல நீ பொருத்தமானவன் தான்! சென்று வா என வழியனுப்பி வைத்தார் புத்தர்.