Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஒரே ஒரு பூ போதும்!
 
பக்தி கதைகள்
ஒரே ஒரு பூ போதும்!

பழநி முருகன் கோயிலுக்கு வந்த பணக்கட்டு படத்தை பேப்பரில் பார்த்தாயா? என்று நண்பரிடம் கேட்டார் ஒருவர்.ஆமாம், பார்த்தேன்! ஆனால், ஏனோ தெரியலை! அந்த முருகன் எனக்கு இப்படியெல் லாம் காணிக்கை போடுமளவு வசதியைத் தரலே! ஏன்...அந்த பழநியையே இன்னும் பார்த்தது இல்லே! என்று விரக்தியாகச் சொன்னார் நண்பர்.கவலை வேண்டாம் நண்பரே! ஒரு கதையைக் கேளுங்க! என்றவர் ஆரம்பித்தார்.சிவனுக்கு பசுபதி என்ற பெயர் இருப்பதைப் புத்தகத்தில் படித்தான் ஒருவன். ஐயோ! என்னிடம் மட்டும் பணமிருந்தால், உள்ளூர் சிவன் கோயிலுக்கு ஒரு பசு வாங்கி காணிக்கையளிப்பேனே! என்று நினைத்துக் கொண்டான்.அன்றிரவு கனவில் சிவன் வந்தார்.பக்தா! பசு காணிக்கை தர உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், உன்னிடம் பக்தி என்ற பசு இருக்கிறது.

அந்த பசுவை எனக்குத் தந்தால் அளவற்ற ஆனந்தம் உனக்கு உண்டாகும். அது மீண்டும் மீண்டும் பாலைச் சுரந்து கொண்டே இருக்கும். அதை எனது திருவடிகளாகிய கொட்டிலில் கட்டிப் போட்டு விடு. அவ்வாறு செய்தால் நல்லொழுக்கம் என்ற கன்றுக்குட்டியை அது உனக்குத் தரும், எனறார்.பக்தன் திடுக்கிட்டு விழித்தான்.சிவனே! தங்கள் பொன்மொழியில் இருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டேன். பணத்தை கோடி கோடியாக உண்டியலில் கொட்ட வேண்டாம். மிருகங்களையோ, பாத்திரங்களையோ, ஆடம்பரமான பூஜை பொருட்களையோ உங்களுக்குத் தர வேண்டாம். ஒரு பக்தன் மனத்தூய்மையுடன், எனக்கு ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ...அதுவும் முடியாவிட்டால் சிறிது நீரையோ தந்தால் கூட போதும். நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கிருஷ்ணர் கீதையில் சொன்னது போல, பசுபதியாகிய உங்களுக்கு பக்தி என்னும் பசுவைக் காணிக்கையாக அளிக்கிறேன், என்று பிரார்த்தித்தான்.மனநிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar