Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தெரிந்ததை செய்யுங்கள்!
 
பக்தி கதைகள்
தெரிந்ததை செய்யுங்கள்!

முடியாது என்ற வார்த்தை அகராதியில் இருக்கக்கூடாது தான். அதற்காக, மரம் வெட்ட படித்தவன், ரசாயனப்பொருள் தயாரிக்க ஆசைப்படக்கூடாது. அவரவருக்குரிய துறையில் சாதனை படைக்க வேண்டும். ஒரு சிறு வியாபாரி மூன்று மகள்களுக்கு கல்யாணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். வருமானம் அன்றாட செலவுக்கே தட்டுப்பாடாக இருந்தது. திருமணத்துக்கோ பெரும் பொருள் தேவைப்பட்டது. ஒருநாள், வியாபாரத்தை முடித்து விட்டு மரத்தடியில் அமர்ந்தார். கையில் இருந்த பேப்பரில், இசைஞானி ஒருவர் பற்றியும், இசையால் அவர் கோடீஸ்வரர் ஆனது பற்றியும் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ஆகா... பாட்டு படிச்சா பணக்காரன் ஆகலாமாமே! நாமும் பாடலாம், என்று பாட ஆரம்பித்தார். ஆனால், அத்தனையும் அபஸ்வரம். அந்த மரத்தில், இறந்து போன சங்கீத வித்வான் பேயாக இருந்தார்.

அந்த பேய் வெளிப்பட்டு, ஐயா சாமி! தயவுசெய்து பாடாதே. இந்த அபத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை, என்றது. எனக்கு பணம் வேண்டுமே! பாடினால் பணம் கொட்டுமென இந்த பேப்பரில் போட்டிருக்கிறார்களே! என்று அவர் பதிலளித்தார். அதற்கு பேய், அவ்வளவுதானே! நான் இவ்வூர் பண்ணையார் மகளைப் பிடித்துக் கொள்கிறேன். அவரும் எவ்வளவோ வைத்தியம் பார்த்து நொந்து போவார். அந்த நேரத்தில் நீர் போய், இங்கே பாடிய மாதிரியே பாடும். நான் உம் அபஸ்வரம் தாங்கமால் அவளை விட்டு ஓடிவிடுவேன். வேண்டிய அளவு பணத்தை பணக்காரர் மகிழ்ச்சியுடன் தருவார், என்றது. அதன்படியே செய்தார் வியாபாரி. தனக்கு தெரிந்த வியாபாரத்தையே பெரிய அளவில் நடத்தினார். இப்போது, அவரும் ஊர் பணக்காரர்களில் ஒருவர். தெரிந்த தொழிலை சிரத்தையுடன் செய்தால், வாழ்வில் வெற்றி உறுதி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar