Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தெளிவான முடிவு!
 
பக்தி கதைகள்
தெளிவான முடிவு!

ஒரு நெய் வியாபாரி நீதிபதி முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான் அந்த . தான் விற்பனை செய்யும் நெய்யில் கலப்படம் செய்கிறான் என்பது அவன் மீதான குற்றச்சாட்டு. விசாரணை நடந்து, குற்றம் நிரூபணமாகி, அவனுக்கான தண்டனையை வழங்கினார் நீதிபதி. கலப்படம் செய்து கெட்டுப்போன நெய் ஒரு அண்டா நிறைய இருந்தது. அது மொத்தத்தையும் அந்த வியாபாரியே சாப்பிட்டுத் தீர்க்க வேண்டும் என்பதுதான் அவனுக்கான தண்டனை. அல்லது, 20 கசையடிகளை அவன் பெற வேண்டும்; கசையடி பெற விருப்பம் இல்லையா... அபராதமாக 100 தங்க நாணயங்களைச் செலுத்த வேண்டும். இந்த மூன்று தண்டனைகளில் தனது விருப்பத்துக்கேற்ப ஏதோ ஒன்றை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார் நீதிபதி.

அந்த வியாபாரிக்கு தங்க நாணயங்களை இழக்கச் சம்மதமில்லை. எனவே, நெய்யையே உண்டு தீர்ப்பதாகச் சொல்லிவிட்டு, உண்ணத் தொடங்கினான். நாலைந்து கரண்டி நெய்க்கு மேல் உள்ளே இறங்கவில்லை. நாற்றம் குடலைப் புரட்டி இழுத்தது. திணறிப் போனான் வியாபாரி. சரி, கசையடிகளையே பெற்றுக் கொள்கிறேன் என்று முன்வந்தான். ஏழெட்டு கசையடிகளுக்கு மேல் அவன் உடம்பு தாங்கவில்லை. நிற்கக்கூட முடியாமல் கதறியபடி கீழே விழுந்தான். கடைசியாக வேறு வழியின்றி, 100 தங்க நாணயங்களை அபராதமாகச் செலுத்திவிட்டு, செய்த தவற்றுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வெளியேறினான். முதலிலேயே அவன் இதைச் செய்திருந்தால், கெட்டுப்போன நெய்யைச் சாப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது; ஏழெட்டு கசையடிகளைத் தாங்கவேண்டிய துயரமும் நேர்ந்திருக்காது. தெளிவான முடிவை ஆரம்பத்திலேயே எடுக்கத் தவறியதன் விளைவுதான் இது. இப்படித்தான் பெரும்பாலோர் துன்பங்கள் சூழும் ஆரம்பக் கட்டத்திலேயே இறைவனை நாடிச் செல்வதில்லை. விளைவாக, மே<லும் மேலும் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகின்றனர். கடைசியாக, வேறு வழியின்றி இறைவனே கதி என உணர்ந்து, பின்பு நற்கதி அடைகின்றனர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar