Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராவணனைக் கொன்ற சூர்ப்பநகை!
 
பக்தி கதைகள்
ராவணனைக் கொன்ற சூர்ப்பநகை!

மாயணத்தைப் பற்றிப் பேசாதவர்களே கிடையாது நாத்திகர்கள் கூட,ஆரம்பிச்சிட்டான்யா இவன் ராமாயணத்தை என்பார்கள்.அந்த அளவிற்கு ராமாயணம், மக்கள் வாழ்வோடு ஊறிப் போய் இருக்கிறது.அப்படிப்பட்ட ராமாயணத்தில் இருந்து இரண்டு நிகழ்வுகளைப் பார்க்கலாம்.திரைப்படப் பாடல்களில் காவியம் படைத்த கவியரசர் கண்ணதாசன், ஒரு துண்டுத் தாளில் ஒரு தகவலைப் பார்த்தார். அந்தத் தாளில் இருந்தது. பட்டாபிஷேகத்திற்குப் பின், அதாவது ராவணசம்ஹாரம் முடிந்து பட்டாபிஷேகம் நடந்ததற்குப் பின்.....ஊரார் அபவாதத்தின் காரணமாக, ராமர் லட்சுமணனை அழைத்து, சீதையைக் கொண்டு போய்க் காட்டில் விட்டு விடச் சொன்னார். அவனும் அவ்வாறே செய்து திரும்பி வந்த போது, ராமர் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த லட்சுமணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் மெள்ள ராமரை நெருங்கினான்.அண்ணா! நீங்கள் சொல்லித் தானே, நான் அன்னை சீதாதேவியைக் காட்டில் விட்டு வந்தேன். இப்போது நீங்களே அழுது கொண்டிருக்கிறீர்களே! ஏன்? எனக் கேட்டான்.தம்பியை நிமிர்ந்து பார்த்தபடி, லட்சுமணா! சீதையைக் காட்டில் விட்டு வரச் சொன்னது ராஜாராமன். மக்களுக்கு அரசனாக இருப்பவன். ஆனால், இப்போது கண்ணீர் விடுவது சீதாராமன். சீதையின் கணவன் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறான், என்றார்.இதைப் படித்த கண்ணதாசன் வியந்தார்.

ராஜாராமனுக்கும், சீதாராமனுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தார். அவ்வளவு தான். ஒருபாடல் உருவாகி விட்டது. அப்பாடல்.... ராமன் எத்தனை ராமனடி என்ற பாடல்... லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் இடம்பெற்றது.அப்பாடலில், ராமருக்கு உண்டான பலவிதமான திருநாமங்களும், அவற்றிற்கான காரணங்களும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில், கடவுளை நம்பாதவர்கள் முதல், காவியம் பாடிய கவிஞர்கள் வரை அனைவரையும் ராமாயணம் கவர்ந்து இருக்கிறது. அப்படிப்பட்ட ராமாயணத்தில் இருந்து, ஒரு கதாபாத்திரத்தைப் பார்க்கலாம்.சூர்ப்பநகை, இவள் ராவணனின் சகோதரி. இவளைக் கம்பர்,நீலமா மணி நிருதர் வேந்தனைமூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் என்று அறிமுகப்படுத்துகிறார். அரக்கர்களுக்கு எல்லாம் அரசனான ராவணனை, அடியோடு அழிக்கும் வல்லமை படைத்தவள் சூர்ப்பநகை என்கிறார் கம்பர். சகோதரனான ராவணனை சூர்ப்பநகை ஏன் அழிக்க வேண்டும்? அதற்குத் தகுந்த வல்லமையோ அல்லது வலிமையோ சூர்ப்பநகைக்கு ஏது?பிறகு ஏன் கம்பர் அவ்வாறு சொல்ல வேண்டும்? முதலில் ராவணனுக்கும், சூர்ப்பநகைக்கும் பகைமை உண்டான நிகழ்ச்சியில் இருந்து பார்க்கலாம். ஒவ்வொன்றாகப் புரியும். சூர்ப்பநகையின் கணவன் வித்யுஜ்- ஜிஹ்வா. அவர்களின் மகன் சாம்பன். சூர்ப்பநகையின் இல்லறம், நல்லவிதமாகத் தான் நடந்து கொண்டிருந்தது. அந்த இல்லறத்தை ராவணன் சிதறடித்தான்.

எப்படி ஏன்? அளவில்லாத வரபலமும், ஆற்றலும் பெற்ற ராவணன், ஒருசமயம் எமனோடு போரிடச் செல்லும்போது, அகங்காரத்தின் காரணமாகப் போர்வெறியில், எதிர்பாராமல் சூர்ப்பநகையின் கணவனைக் கொன்றுவிட்டான்.இதையறிந்த சூர்ப்பநகை அதிர்ந்து போனாள். அண்ணனும், அரசனுமான ராவணனை, அவளால் மோதி அழிக்க முடியுமா என்ன? கணவனை இடிந்து கண்ணீர் விட்டுக் கதறிய சூர்ப்பநகை, அப்போதே ஒரு முடிவெடுத்தாள். ராவணா! நல்லறமாகப் போய்க் கொண்டிருந்த என் இல்லறத்தைச் சிதற வைத்த சீற்றம் கொண்டவனே! உன்னை அழிக்காமல் விட மாட்டேன் என்று உறுதியெடுத்தாள்.அதற்குண்டான சக்தியைப் பெறுவதற்காக சூர்ப்பநகையின் மகனான சாம்பன், அடர்ந்த காட்டிற்குள் தவம் செய்யப் போனான். சூர்ப்பநகை, ராவணனை அழிக்க நினைத்ததற்குக் காரணம் இது. இதைத் தொடர்ந்து சூர்ப்பநகையின் வல்லமை வெளிப்பட்டது.  அது.... ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் இருந்த காலம்... ராமருக்கும் சீதைக்கும் லட்சுமணன் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தான்.  ஒருநாள் அவன் காட்டிற்குள் தர்ப்பை புல் அறுக்கச்  சென்றான். ஆள் உயரத்திற்கு தர்ப்பை வளர்ந்திருந்த  காட்டிற்குள் தான், ராவணனை அழிப்பதற்கான சக்தி வேண்டி, சூர்ப்பநகையின் மகனான  சாம்பன் தவம் செய்து கொண்டிருந்தான்.சாம்பன் தவம் செய்வது வெளியே அறியாதபடி, நன்கு வளர்ந்திருந்த தர்ப்பை மறைத்திருந்தது.அங்கே, லட்சுமணன் தர்ப்பை அறுக்கும்போது, புல்லோடு சேர்த்து சாம்பன் தலையையும் அறுத்து விட்டான். சாம்பன் இறந்ததை அறிந்த சூர்ப்பநகை சீற்றத்தின் உச்சிக்கே போய்விட்டான்.கோபப்பட்டால் காரியம் ஆகுமா? ஒருபக்கம், கணவனைக் கொன்ற ராவணன்... மற்றொரு பக்கம் மகனைக் கொன்ற லட்சுமணன். சூர்ப்பநகை தீர்மானித்தாள். கணவனைக் கொன்றவனையும், மகனைக் கொன்றவனையும் மோதவிட்டு, அதன்மூலம் அவர்களை அழிப்பதற்கான செயல்களில் ஈடுபட்டாள்.  அதன் விளைவு என்னவென்று, நமக்கு நன்றாகத் தெரியும்.  ராமாயணத்தில் உணர்ச்சிக் குவியலான ஒரு கதாபாத்திரம் சூர்ப்பநகை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar