Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சிவக்க வைத்த சிவப்பு மாப்பிள்ளை!
 
பக்தி கதைகள்
சிவக்க வைத்த சிவப்பு மாப்பிள்ளை!

வாழ்க்கையில் ஒருமுறை தவறு செய்தால் போதும்...அதன் விளைவு காலம் காலமாக நம்மை விரட்டி வரும். கடைசி வரை நிம்மதி இருக்காது. தணிகாசலம்... நடுத்தர குடும்பத் தலைவர். இவரது மகள் சங்கரி. எப்போதும் அலங்காரம் செய்தபடி இருப்பாள். ஒருநாளைக்கு பத்துதடவை தலை வாருவாள். அப்படியும் திருப்தியில்லாமல், 11வது தடவையாக, அம்மாவிடம் சென்று கூந்தலை பின்னச் சொல்வாள். தனக்கு அழகான கணவன் வர வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். தணிகாசலம், தன் தங்கை மகன் குணசேகரனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். பையன் ஏதோ ஒரு உத்தியோகத்தில், குடும்பம் நடத்துமளவு சம்பளம் பெறுபவனாக இருந்தான். ஆள் கருப்பென்றாலும், மனம் வெள்ளை. சிறந்த பக்திமானும் கூட. இந்த தகவல் சங்கரியின் காதுக்கு வந்ததோ என்னவோ... குய்யோ முறையோ என அழ ஆரம்பித்து விட்டாள்.

போயும் போயும் என்னை ஒரு கருப்பனுக்கா கட்டி வைப்பீர்கள்! அவன் சாமியார் மாதிரி இருப்பான். சம்மதிக்கவே மாட்டேன்.  சிவப்பழகனைப் பிடித்து  வாருங்கள், என்று பிடிவாதம் செய்தாள்.  அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல், மகளின் விருப்பத்திற்கு தலையாட்டினர். ஒருமுறை, அம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. விழாவுக்கு, பக்கத்து வீட்டுக்கு சுந்தரம் என்பவன் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்தான். பெயருக்கேற்ப ஆள் கொள்ளை அழகு. அவனை சங்கரி பார்த்தாள்.  அவனைத் தனக்கு பேசி முடியுங்களேன் என்று அம்மாவிடம் கெஞ்சினாள். பெற்றவர்களும் ஏற்பாடு செய்ய, சுந்தரம் வீட்டார் சந்தோஷமாக திருமணத்தை முடித்தனர். அதன்பிறகு தான் விவகாரம்  ஆரம்பித்தது. சுந்தரம்  வேலைக்குப் போகாமல்,  பெற்றவர்கள் சம்பாத்தியத்தில் காலம் ஓட்டிக் கொண்டிருந்தவன். அவர்கள் சில ஆண்டுகளில் மறைந்து விடவே, சங்கரியின் நகைகளை விற்று சாப்பிட்டான். வயிற்றுப்பாட்டுக்கே சிக்கல்  வந்தது.

வேண்டா வெறுப்பாக வேலைக்குப் போனான். குறைந்த கூலி கிடைத்தது. ஒருவர் அவன் வீட்டுக்கு வந்து, கொத்தனார் வேலை செய், தினமும் நூறு ரூபாய் கிடைக்கும், என்றார். அந்த வேலை சுந்தரத்துக்கு  தெரியும். பத்துநாள் செய்தால், இருபது நாள் லீவு போட்டு விடுவான். பிறகெப்படி... அவனை நம்பி வேலை கொடுப்பார்கள்!  சுந்தரத்தின் முகமே மாறிப் போனது. சிவப்பாக இருந்தவன் கவலையிலேயே கருத்து  விட்டான். தன் மணாளனின் நிலையைப் பார்த்து சங்கரி அழுதாள். சிவப்பு மாப்பிள்ளை வேண்டும் என்றவளின் மனமும் சிவந்து போயிருந்தது. நான் எவ்வளவோ  சொன்னேனே! புற அழகைப் பார்த்ததால் வந்த வினையைப் பார்த்தாயா! உன் வாழ்க்கை பெண்களுக்கு ஒரு பாடம். கருப்போ, சிவப்போ யார் உழைப்பாளியோ அவனுக்கு தான் ஒரு பெண் மாலையிட வேண்டும். அழகன், பணக்காரன் என்பது மட்டும்  தகுதியல்ல.  நீ öŒ#த தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறா#. உன் புருஷன் சரியில்லை  என்றால், நீ நாலு வீட்டுக்கு போய் வேலை செய்து  பிழைத்துக் கொள், என்று விரட்டி விட்டார். ஒரு காலத்தில் அலங்காரவல்லியாக வலம் வந்த சங்கரி, இப்போது வீடுகளில் வேலைக்காரியாக இருக்கிறாள். அவளது உழைப்பில், இவளது கணவனும் சாப்பிடுகிறான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar